Saturday, March 26, 2011

மார்பு சளிக்கு கூவைக் கிழங்கு.

மார்பு சளிக்கு கூவைக் கிழங்கு.

நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து.


மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள முயல்வர். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும் மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்ற போதும் உண்டாகும்.

இன்றளவும் நாம் அநேகரை பார்க்கலாம். மார்பு சளி என்பது மிக மோசமானது. சிறு குழந்தைகளுக்கு நுரையீரல் அழற்சி முதற்கொண்டு பெரியவர்களுக்கு மிக மோசமான ஆஸ்த்மா வரை அனைத்துக்கும் மூல காரணம் இந்த மார்பு சளிதான்.

இந்நோய்க்கான மருந்தாகக் கூவைக் கிழங்கின் மாவு பயன்படுவதாகப் பதார்த்த குண போதினி குறிப்பிடுகிறது. கூவைக் கிழங்கு ஓர் அரிய மருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய கூவைக் கிழங்கைப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிறது மலைபடுகடாம்.

ஆங்கிலத்தில் இதை [Arrow Root - Botanical Name "Maranta arundinacea"] என்பர்.
Download As PDF

No comments: