Saturday, April 2, 2011

ஆரியபட்டா (கிபி 476 ~ 550)




இந்தியாவின் முதல் விண்வெளி செயற்கைகோள் சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19, 
1975 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற 
விண்ணோடத்தில் செலுத்தப்பட்டது.

ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைகோள் 

ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் 
நினைவாக இச்செய்மதிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

ஆரியபட்டா (கிபி 476 ~ 550) என்பவர் இந்தியக் கணிதவியலின் செந்நெறிக் காலத்தைச் 

சேர்ந்த புகழ் பெற்ற கணிதவியலாளரும், இந்திய வானியலாளர்களுள் முதன்மையானவரும் ஆவார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற பணிகள் ஆர்யபட்டீய (கிபி 499, 23 வயதில்) 
மற்றும் ஆரிய-சித்தாந்தம் ஆகும்.

இயற்கணிதத்தைச் சார்ந்து முதன்முதலில் உலகில் எழுதப்பட்ட நூல் 

இந்தியாவில் ஆரியபட்டாவால் 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது 
பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.

பாடல் வடிவில் அமைந்துள்ள ஆரியபட்டீயம், கணிதவியல், வானியல் என்பன 

தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் இந்தியக் கணிதவியலில் இந்நூல் செல்வாக்குச் செலுத்தியது.

மிகச் சுருக்க வடிவில் இருந்த இந்நூலுக்கு, விரிவான
உரைகளை இவரது மாணவரான முதலாம் பாஸ்கரரும்;
15 ஆம் நூற்றாண்டில், ஆரியபட்டீய பாஷ்யம் என்ற பெயரில்
நீலகண்ட சோமயாஜி என்பவரும் எழுதியுள்ளனர்.பாஸ்கராவை சிறப்பிக்கும் 

வகையில் இரண்டாவது செயற்கைகோளிற்கு பாஸ்கரா என்று பெயரிடப்பட்டது.

இவ்விருவரும் ஜோதிட மற்றும் வானசாஸ்திர நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Download As PDF

No comments: