தன் உண்மையைத் தானே அறிய ஒவ்வொருவரும் முயலவேண்டும்.
மனிதனைத் துன்புறுத்தும் பல இன்னல்களுக்கு உள்ள ஒரே பரிகாரம்
அவன் தன் தெய்வீக இயற்கையை அறிந்து கொள்வதுதான்.
கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ, காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள்.
இவையெல்லாம் உண்மை இல்லை. இதை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள். அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ, ஆண்டுக்காகவோ தேவதைகளுக் காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள். அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள்.
உங்கள் செயல்களையும், பேச்சையும், கர்மச் செயல்களையும் கவனியுங்கள். நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.
நம் தோற்றத்தை கண்ணாடியில் அழகுபடுத்திக்
கொள்வதுபோல் நம்மை நமது எண்ணங்களாலும்
செய்கைகளாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம் . உங்களின் எண்ணங்களை முதலில் உங்களின்
ரசனைக்குரியதாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்.
அது நிச்சயமாக அடுத்தவரின் ரசனைக்குரியதாகவும் இருக்கும்.
விளக்கின் ஒளியில் அனைத்தையும் காணலாம்.
மேலும் விளக்கை காண அதன் ஒளி ஒன்றே போதுமானது!
அதுபோன்று
அனைத்தையும் நான் காண்கிறேன்.என்னை காண
என் உணர்வின் இருப்பு ஒன்றே போதும்!