Saturday, May 30, 2020

மாணடி சேர்ந்தார்.


மலர்மிசை ஏகினான்..
அடைவதற்கரிய பெரும்பேறு என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை தன்னுள்ளே வாழும் காலத்தில் அறிவதே
உள்ளக் கமலத்தின் கண் வீற்றிருக்கும் இறைவனின் திருவடியை ஒருவர் வாழும் காலத்திலேயே அறிந்து அடைய வேண்டும்!
மாணடி சேர்ந்தார்...
ஒருவரை பிறவி சுழற்சியிலிருந்து மீட்கும் மாட்சிமை பொருந்திய திருவடியே மாணடி என்பதாகும் !
நிலமிசை நீடுவாழ்வார்...
மாணடி சேர்ந்தவரே இந்த நிலத்தின் மேல் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் ஆவார். மற்றவருக்கு அது அரிதான செயலாகும்.
Download As PDF

Friday, May 29, 2020

அறிவே ஆதியாய் நின்றது .



அறிவே ஆதியாய் நின்றது !

அகரம் என்பது அணு 
அணு என்றால் நுண்ணியது என்று பொருள்.

உதலம் { உகரம் } என்றால் விரிவடைகின்ற அல்லது விரிந்து பரந்தது என்று பொருள் 

வெளிப்படாது நின்றது அகரம்.
வெளிப்பட்டு நின்றது உகரம்.

தோன்றா நிலை அகரம்.
தோன்றி நிற்பது உகரம்.


ஆதியாய் நின்ற வறிவு
முதலெழுத்தோதிய நூலின் பயன் .

அந்த நுண்ணிய அறிவே ஆதியாய் நின்றது .

அகரமும் உகரமும் ஆதியையே முழுமுதலாக கொண்டது. அந்த ஆதியை முதற்றாக கொண்டதே உலகு .


Download As PDF

வாலறிவு



வாலறிவு !

கற்றதனால் உண்டாவது நூலறிவு: 
இறைவனே வணங்கி அருளநுபவம் பெறுவது வாலறிவு 

அறிவில் இரண்டு வகை உண்டு;
நூலறிவு, வாலறிவு என்பன அவை.

பல நூல்களேக் கற்று அதனல் பெறும் அறிவு நூலறிவு;
அது மூளையைச் சார்ந்தது.

அநுபவத்தோடு கூடி இறைவனிடம் ஈடுபடுவது வாலறிவு. 
அது இதயத்தோடு ஒட்டியது; ஆன்மலாபத்தைத் தருவது.


கடையிலா அறிவு,
வரம்பற்றஅறிவு,
முழுதுணர்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவு,
அலகிலா அறிவு,
முற்றறிவு, குற்றமற்ற அறிவு'
எனப் பொருள்படும் எனவும் கூறுவர்.

அளப்பற்கரிய தூய அறிவினை உடையவன் வாலறிவன் ஆவன்.
வாலறிவன் என்று சொல்லப்பட்டதால் கடவுள் அறிவு வடிவினன் ஆகின்றான்.

மணக்குடவர் :  "விளங்கிய அடிவினை உடையவன்" என்கிறார்.
பரிமேலழகர் : "மெய்யறிவினை உடையான்" என்கிறார்.
பரிதியார் "மேல் அறிவாளனான சிவன்" என்கிறார்.
காலிங்கர் "மாசற்ற அறிவுருவாகிய இறைவன்" என்கிறார்.

வாவாலறிவை பரை அறிவு என்பாரும் உளர் 
கரண அறிவு,
இந்திரிய அறிவு,
ஜீவ அறிவு,
ஆன்ம அறிவு
அதையும் கடந்த
கடவுளின் அறிவை அறிய அருள் வேண்டும்.

அருளால் அறியும் அறிவே வாலறிவு ஆகும்.

Download As PDF