Saturday, March 26, 2011

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் பாடங்கள்.





தத்தாத்ரேயர் என்கிற அவதூதர் 24 குருமார்களிடம் பாடம் கற்றதாக கூறியுள்ளார் . 
இது அவதூத கீதை எனப்படும். இருபது நான்கு குருமார்களும் யார் என்றால் 
நாம் தினசரி காணும் வஸ்துக்களே.

அதில் பூமி,காற்று, ஆகாயம், நீர் மற்றும் நெருப்பு, சந்திரன் சூரியன்,புறா, 

மலைப்பாம்பு, சமுத்ரம், விட்டில் பூச்சி, தேனீ, யானை, வேடன், மான், மீன், 
பிங்கலை என்ற வேசி , குர்ரரம் என்ற அழுகுரல் பறவை, பாலகன், கன்னிகை, 
கொல்லன், சர்ப்பம் , சிலந்தி, குளவி ஆகியவை ஆகும்.

தினமுமே நாம் காணும் ஒவ்வொரு பொருளில் இருந்தும் ஏதேனும் பாடத்தை 
கற்றுக் கொண்டே இருக்கலாம்.நீங்கள் காணும் உணரும் விசயங்களிலேயே 
வாழ்கையின் ரகசியங்களும அடங்கிஇருக்கிறது.
Download As PDF

No comments: