Thursday, June 16, 2011

நிம்மதி இழப்பது எதனால்?

ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.
சுவாமி,என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை.
என்ன காரணம் என்பது புரியவில்லை? என்று கேட்டார்.
அதற்கு துறவி பதில் சொல்லவில்லை. 

அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது.அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.

அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.

ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக்கண்டு அந்த குழந்தை 
அழுதது.இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி 
"இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் 
இந்த நிலை வந்திருக்குமா?"

அதே போன்றுதான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்னை வாரது.
நிம்மதி கிடைக்கும்."பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்ற விவரம் 
புரிந்துவிட்டது.

Download As PDF

1 comment:

Kavinaya said...

நல்ல கதை.