Thursday, June 16, 2011

பற்று.


ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார்.அவரிடம் பலபேர் சீடர்களாக இருந்து தனக்கு ஏற்படும் ஐயங்களை கேட்டு 

தெளிவு பெற்றனர்.ஒருநாள் ஒரு சீடன் அவரிடம் 
"ஐயா.பற்றுகளை விட்டால்தான் இறைவனை அடைய முடியுமா?பற்றுகளை வைத்துக்கொண்டே நாம் முயற்சி 
செய்து இறைவனை அடைய முடியாதா?"என்று கேட்டான்.

 

துறவி அந்த சீடனை அழைத்துக்கொண்டு அருகிலிருக்கும் ஆற்றங்கரைக்கு
சென்றார்.கரை ஓரத்தில் கட்டி இருந்த படகில் அவனை அமரச் செய்தார்.

"தம்பி! படகில் துடுப்பு உள்ளது.இப்போது துடுப்பு போட்டு அக்கரைக்கு செல்" 

என்றார்.அவனும் இயன்ற மட்டும் துடுப்பு போட்டும் படகு சிறிதுகூட நகரவே இல்லை.

பரிதாமாக பார்த்த அவனிடம் துறவி "இவ்வளவு நேரம் துடுப்பு போட்டாயே! 

படகு எவ்வளவு தூரம் சென்றது?"என்று கேட்டார். 

"ஐயா, நீங்கள் சொன்னதினால்தான் துடுப்பு போட்டேன்.நான் எவ்வளவு 

முயற்சி செய்தாலும் இந்த படகு சிறிதுகூட நகரவில்லை"என்றான்,சீடன்.

"ஏன் நகராது?" என்று கேட்டார்.துறவி.

"படகுதான் மரத்தில் கட்டப்பட்டுள்ளதே எப்படி நகரும்?" என்றான் அவன்.

அதற்கு துறவி புன்முறுவலுடன் அவனை நோக்கி "தம்பி! இது போன்றுதான் 
பற்றும் மனிதனை பிடித்துக்கொண்டிருக்கிறது" என்றார்.
Download As PDF

No comments: