28 வருடங்களுக்கு முன் நான் காரைக்காலில் படித்துகொண்டிருந்த சமயம் அது.
காரைக்காலுக்கு பக்கத்தில் திருநள்ளாரில் குடும்பசகிதமாக சனி பெயர்ச்சிக்கு
அதிகாலை 4.30 மணியளவில் சென்றிந்தோம்.
வேட்டு சத்தம் கேட்டதும் அனைவரும் அந்த குளத்தில் குளித்துவிட்டு
பெயருக்கு ஒரு துணிவீதம் விட்டு செல்வது வழக்கம். அவ்வாறே வழக்கம் போல்
எல்லாம் நடந்தது.
வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து
அந்த குளத்தை காண்பதற்கு சென்றோம்.காலையில் பரபரப்பாக இருந்த இடம்
வெறிசொடிப் போய் இருந்தது.ஆட்கள் ஒருவரும் இல்லை.குளத்தில் உள்ள
மீன்கள் அனைத்தும் எண்ணைகலந்த நீரில் செத்து மிதந்தன.இன்னும் அந்த
காட்சிகள் பசுமரத்தாணிபோல் மனதில் உள்ளது.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சனியின் கோயிலை அப்போது
சீண்டுவதற்கு யாரும் இல்லை.அதே கோவில் தற்சமயம் திருப்பதி அளவிற்கு
வளர்ந்துள்ளதை பார்க்கும்போது மிகவும் வேடிக்கையாக உள்ளது.அந்த அளவிற்கு
மக்களுக்கு சனியின் மீது பயம் வளர்ந்துள்ளது.
ஆன்மிகம் என்ற பெயரில் இந்தமாதிரி மூடத்தனத்தை வளர்க்க கூடாது.இது
போன்றே தஞ்சை பெரியகோயில் நந்தி வழிபாடும்...ராஜராஜன் விரும்பிய
சமயம் வளரவில்லை.மாறாக வேறு ஏதேதோ நடந்தேறுகிறது.
No comments:
Post a Comment