Saturday, April 2, 2011

அறம் செய்ய விரும்பு.





அறம் செய்ய விரும்பு!

வெறும் மூன்று வார்த்தைகள்தான்.ஆனால் பொருள் மிக உன்னதமானது. இதற்கு 

நம்மவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கே...எழுதியவன் ஏட்டை கெடுத்தான்.
பாடியவன் பாட்டை கெடுத்தான் என்னும் கதை போலத்தான் உள்ளது.

அறம் என்றால் செய்வன செய்தலும் செய்யாதன செய்யாதிருத்தலும்மாம்.மேலும் அறம் என்பது தர்மம் ( விதிக்கப்பட்ட கடமை ) அல்லது நெறி எனப் பொருள்படும்.யுத்த தர்மம் எனில் 

யுத்தத்தில் கடைபிடிக்கும் நெறி என்று பொருள்.அதுபோன்று அவரவருக்கென்று விதிக்கப்பட்ட
உரிய கடமைகளை உணர்ந்து விருப்பமுடன் ஆற்றவேண்டும். இதில் உயர்வு 
தாழ்வில்லை. இதுவே அறம் எனப்பட்டது. 

புருஷார்த்தம் எனப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கில்  அறமே முதன்மையாகும்.

அறத்தை இருவகையாக இல்லறம்,துறவறம் என்று 
திருக்குறளில் வள்ளுவர்  பிரித்துள்ளார். மேலும் இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும் இன்னது அறம் என உரைக்கிறார்.

இல்லறத்தார்க்கு இருபது அதிகாரத்திலும், துறவறத்தார்க்கு பதிமூன்று அதிகாரத்திலும் அவரற்குரிய ஒழுக்க மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை, அவருக்குரிய தர்மத்தை, அறத்தை, கடமையை (செயல்முறையை) விளக்குகிறார். மேலும் 
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அறனை பற்றிய சிறப்பை வலியுறுத்தி பத்து குறட்பாக்கள் உள்ளது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

(இங்கே இருமை என்பது பல்வேறு பொருளுடையது.)
...................................................................................................................
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.(ஔவை )
...................................................................................................................

திருமூலர் அறத்தை பற்றி பின்வருமாறு உரைக்கிறார்.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

ஞானம் என்றால் அறிவு என்று பொருள்.அது புலன்களால் அறியும் அறிவல்ல.

புலன்களின் அறிவிற்கு ஆதாரமானஅறிவு.புலனறிவுகளை கடந்தது.அது வாலறிவு.
(எல்லா அறிவுகளின் தோற்றத்திற்கும் ஆதாரம்).

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அறியும் அறிவு நீயே. இதை உணர்வதே ஞானம்.

ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை.
இதை தவிர்த்து வேறொன்றை உரைக்கும் சமயம்,நல்ல சமயம் ஆகாது. 

அறிவால் அறிவை அறிவதே முத்தி.இதை தவிர்த்து எந்தச் சாதனங்களும் 
முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே 
மக்களுட் சிறந்தவராவர்.

தன்னை அறிதலே அறத்தில் சிறந்தது
என வலியுறுத்துகிறார்.

ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளித்தால் நீண்ட கட்டுரை ஆகிவிடும்.

(தேவைபடின் அதையும் செய்வோம்.)

ஔவை
அறத்தை விரும்பு என ஒருவரியில் வடித்துவிட்டாள்.

Download As PDF

அறிவே கடவுள்.



ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.
                                    திருமந்திரம்.

முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந்துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள்தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்ம்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.
Download As PDF

ஆன்மீக வழி.





ஆன்மீக வழியைத் தேடுவது என்றால் ஐம்புலன்களின் எல்லையும் 
அனுபவத்தையும் கடந்த ஒன்றைத் தேடுவதுதான்.
Download As PDF

சிற்றின்பமும்,பேரின்பமும்

அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன் 
அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து 
அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.

                                                                              -பட்டினத்தார்
Download As PDF

ஆரியபட்டா (கிபி 476 ~ 550)




இந்தியாவின் முதல் விண்வெளி செயற்கைகோள் சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19, 
1975 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற 
விண்ணோடத்தில் செலுத்தப்பட்டது.

ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைகோள் 

ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் 
நினைவாக இச்செய்மதிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

ஆரியபட்டா (கிபி 476 ~ 550) என்பவர் இந்தியக் கணிதவியலின் செந்நெறிக் காலத்தைச் 

சேர்ந்த புகழ் பெற்ற கணிதவியலாளரும், இந்திய வானியலாளர்களுள் முதன்மையானவரும் ஆவார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற பணிகள் ஆர்யபட்டீய (கிபி 499, 23 வயதில்) 
மற்றும் ஆரிய-சித்தாந்தம் ஆகும்.

இயற்கணிதத்தைச் சார்ந்து முதன்முதலில் உலகில் எழுதப்பட்ட நூல் 

இந்தியாவில் ஆரியபட்டாவால் 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது 
பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.

பாடல் வடிவில் அமைந்துள்ள ஆரியபட்டீயம், கணிதவியல், வானியல் என்பன 

தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் இந்தியக் கணிதவியலில் இந்நூல் செல்வாக்குச் செலுத்தியது.

மிகச் சுருக்க வடிவில் இருந்த இந்நூலுக்கு, விரிவான
உரைகளை இவரது மாணவரான முதலாம் பாஸ்கரரும்;
15 ஆம் நூற்றாண்டில், ஆரியபட்டீய பாஷ்யம் என்ற பெயரில்
நீலகண்ட சோமயாஜி என்பவரும் எழுதியுள்ளனர்.பாஸ்கராவை சிறப்பிக்கும் 

வகையில் இரண்டாவது செயற்கைகோளிற்கு பாஸ்கரா என்று பெயரிடப்பட்டது.

இவ்விருவரும் ஜோதிட மற்றும் வானசாஸ்திர நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Download As PDF

Friday, April 1, 2011

முட்டாள் தினமும், முட்டாள் கொள்கையும்.



நம் முன்னோர்கள் காலத்தை இயற்கையின் ஓட்டத்தை
அனுசரித்தே வகுத்துவைத்தனர்.இதற்கு இயற்கை கணிதமுறை
என்று பெயர்.

ஒரு நாள் என்பது பூமியின் ஒரு சுழற்சியின் காலம்.ஒரு சுழற்சி
இரவு,பகல் என்ற இருபொழுது கூடியது.ஒரு இரவும் பகலும் சேர்ந்தது
ஒரு நாள்.நாழிகை,மணித்துளிகள் என பல்வேறு அளவு கொண்டாலும்
இரவும் பகலும் பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இயற்கையே.

அதுபோல் ஒரு மாதம் என்பது பதினான்கு வளர்பிறை நாளும்,
பதினான்கு தேய்பிறை நாளும்,பௌர்ணமி மற்றும் அமாவாசை
ஒரு நாட்களும் சேர்த்து மொத்தம் முப்பது நாட்கள் கொண்டது
ஒரு மாதம்.இது பூமியை சந்திரன் சுற்றும் காலஅளவு.

இவ்வாறு பன்னிரு முறை சந்திரன் பூமியை சுற்றியாவாறே
பூமியும்சந்திரனும் சூர்யனின் வட்டப்பாதையை கடப்பது ஒரு
வருடம் எனப்படுகிறது.இதுவும் இயற்கை கணிதமே!

சூரியனின் நீள்வட்ட பாதையில் பூமி வடக்கிலிருந்து தெற்காக
பயணிப்பது தட்சிணாஅயனம்(தெற்கு அல்லது கீழ் நோக்கிய வழி)
என்றும்,(ஆடிமாதம் முதல் கார்த்திகை வரை ),தெற்கிலிருந்து
வடக்காக பயணிப்பது உத்ராஅயனம் (வடக்கு அல்லது மேல்
நோக்கிய வழி)என்றும் பொருள்படும்.(மார்கழி மாதம் முதல்
ஆனி வரை.)

சூரியனின் நீள்வட்ட பாதையில் இரவு பகலும் சரியாக உள்ள கால
அளவு சித்திரை மாதம் மற்றும் ஐப்பசி மாதம் சரியாக இருப்பதால்
கோடைத் துவக்கத்தையே ஆண்டின் முதற்பாகமாக கொள்வது
உலக வழக்காகிற்று.


கிரேக்க நாகரிக்கத்தில் அப்போலோ என்ற சொல் சூரியனை குறிக்கும்.
ஏப்ரல் மாதம் ஆண்டின் துவக்கமாக கொண்டனர்.பல்வேறு
நாகரீகத்திலும் இந்த இயற்கை கணிதத்தை ஒட்டியே ஆண்டின்
துவக்கமாக ஏப்ரல் அமைந்தது.16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின்
பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயேபுத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு
வந்தது.

பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான
13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை
ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை
நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.


ஏனெனில் ஏசு கிறிஸ்து டிசெம்பர் மாதம் 25ஆம் பிறந்ததால்
அதன்பிறகு கிறிஸ்து ஆண்டு கணக்கிடப்படுவதால் இனி ஜனவரியே
மாதமே தொடக்கமாக கொள்ளவேண்டும்.ஏற்றுகொள்ளாதவர்கள்
முட்டாள்கள் என்றழைக்கப்பட்டனர்.இதுவே முட்டாள்கள்
தின பிறப்பின் ரகசியம்.

இன்றும் வருடத்தின் கடைசியாக (year endinng) மார்ச் 31
உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

தீர்ப்பை தங்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.
Download As PDF

மனிதர்கள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்!



கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்
கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயனாகும்
பரிவு சொல்லித் தழிவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே!

விவேக சிந்தாமணி.

கருத்தில் கொள்ளவேண்டிய நூற்களை கல்லாதவன் மூடனாவான்.
அளவறிந்து பேசதெரியாதவன் மடையனாவான்.
ஒரு தொழிலையும் செய்யாதவன் தரித்திரியனாவான்.
ஒன்றுக்கும் உதவாதவன் வீணன் ஆவான்.
கற்றறிந்த பெரியோர்கள் முன் தான் கொண்ட கருத்துக்களை
பேச அஞ்சி மரத்தைப்போல் உள்ளவன் பேயனாவான்.
உள்ளொன்று வைத்து புறமொன்று நடிப்பவன் ஏமாற்றுகாரனாவான்.
பிறர்பசியை தன்பசி போல் கருதி இடாமல் உண்ணுபவன் பாவியாமே!
Download As PDF

கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிருபிக்க முடியாது.

குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான்.

அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை 

போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.நான் அதை அறிந்து கொண்டேன்,நீங்கள் 
அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான்.

இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.அந்த கிராமத்து 

மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.

அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை 

ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன்.
அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான்.

வெளிச்சத்தை தொடமுடியாது,ருசிக்க முடியாது.நுகரவும் முடியாது.கேட்கவும் முடியாது.ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான்.

ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று 

கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள்
அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள்.

அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார்.அதன் பின் அவர் இவனுக்கு நான் 

தேவை இல்லை.வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு 
நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.அவனால் வெளிச்சம் இல்லை 
என்பதை நிருபிக்க முடியும்.எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். 
என்று கூறினார்.

ஆறு மாத காலத்தில் புத்தருடைய மருத்துவர் அவனை குணப்படுத்தினார்.

அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.ஆனால் வெளிச்சம் உள்ளது.இப்போது நான் அதை அறிகிறேன்.என்று கூறினான்.

இப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம்
எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்.அதை தொட வேண்டும்.நுகர வேண்டும்.

என்று கேட்டார்.

உடனே அந்த முன்னாள் குருடன்.அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.அதை அடைவதற்கு வேறு வழி இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் 

நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிருபித்தல்சாத்தியமில்லை.
எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை 
நிருபிக்க முடியாது.
Download As PDF

Wednesday, March 30, 2011

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!



நமது இருப்பு உடலைச் சார்ந்ததன்று.மாறாக 
உடலின் இருப்பு நம்மைச் சார்ந்தது.அதாவது 
நாம் உடலன்றி இருக்கலாம்.ஆனால் 
உடல் நாம் இன்றி இருக்க முடியாது.

நம்மை உடலாக உணர்வதே அஜ்ஞானம்.பந்தம்.
எதனால் இந்த உடல் தாங்கப்படுகிறதோ அதுவே நீ!
அழியும் உடலுடன் உன்னை காண்பதாலேயே நீ அழிவடைகிறாய்.

இந்த கீதையின் வரிகளையே கவிஞர் கண்ணதாசன் எளிமைபடுத்தி 
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை."
 
என்று பாடியிருக்கிறார்
Download As PDF

Monday, March 28, 2011

என்னால் உனக்கு என்ன பயனுண்டு?



"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்"

உன்னுள் அறிவாய் விளங்கும் அறிவை அறியாதவரை
இறைவனை வேறெங்கும் காணமுடியாது.அந்த
அறிவை அறிவதனால் அதற்கொன்றும் ஆதாயம் இல்லை.
அறியும் நீயே! அறியாமையால் ஏற்படும் பிறவியை கடப்பாய்!

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத்தார்க்குண்டு;
பொன்படைத்தோன்தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு?

அத்தன்மையைப்போ உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டு
உனைப் பணியும்என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே!

பொன்னை வைத்திருப்பவருக்கு பொன்னால் ஆகும்பயன் அநேகமுண்டு.

பொன்படைத்த அவர்களால் அந்த பொன்னுக்கு என்ன பயன்?அதுபோல உன்னால் வேண்டும்பயன் அனைத்தும் வேண்டிப் பெற்ற என்னால் உனக்கு என்ன பயனுண்டு?
காளத்தி ஈஸ்வரனே
Download As PDF

Sunday, March 27, 2011

நெறியான அன்பர் நிலையறிந் தாரே!



அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
திருமந்திரம்.

அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து 

அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, 
இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே 
தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.
Download As PDF

பயனில்லாத ஏழு.



ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தைத் தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும்தானே.
Download As PDF

மாணிக்க சிந்தனை.


"வேண்டத்தக்க தறிவோய்நீ ",
"வேண்டமுழுதுந் தருவோய் நீ வேண்டும்."

(குழைத்தப்பத்து-
திருவாசகம்


எனக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிவபன் நீ.என் விருப்பத்தை 


சொல்ல தருபவனும் நீயே என்று இதற்கு பொருள் விளக்கம் தருவார்கள்.

உண்மை பொருள் விளக்கம்:

வேண்டத்தக்கது =வேண்ட தகுதி உடையது.

அறிவோய் =அறிவாய் இருப்பதாகிய,

நீ =நீயே.

வேண்ட =வேண்டிட

முழுதும் =நிறைவாய் உள்ள அறிவை (உலகில் முழுமையான பொருள் ஞானமே.)

தருவோய்=தருகின்ற

நீ =அறிவு நீயே.

வேண்டும்=வேண்டும்.
நிறைவாய் உள்ள அறிவை தருகின்ற அறிவு நீயே வேண்டும்.
Download As PDF

ஆசைக்கு மூலகாரணம் அறியாமையே



துன்பத்திற்கு காரணம் ஆசையே என்றார் புத்தர்.
ஆனால் ஆசை ஒரு உபகாரணமே ஒழிய அது முதற்காரணம் அல்ல.

ஆசைக்கு மூலகாரணம் அறியாமையே என்பது சித்தாந்தம்.

இதை ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்குவோம்.கட்டிய வீட்டின் சுவற்றில் 

விரிசல் ஏற்பட்டால் சாதரணமாக விரிசல் ஏற்பட்ட இடத்தில் பூசுவேலை மாத்திரம் செய்வதுண்டு.விரசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய முற்படுவதில்லை.

உண்மையில் கட்டிடத்தை தாங்கும் தூண்களின் பலஹினமே விரிசலுக்கு 

காரணம்.விரிசல் என்பது கோளாறு இல்லை.அது வெறும் கோளாறின் 
வெளிப்பாடே.தாங்கும் தூண்களின் பலஹினமே உண்மை காரணம்.அதுபோல 
உடலில் தோன்றும் காய்ச்சலும் நோயின் வெளிபாடே அல்லாமல் காய்ச்சல் 
என்பது நோயல்ல.காய்ச்சலின் மூலமறிந்து அதற்குதான் மருந்தளிக்க வேண்டும். 

இவ்வாறே துன்பத்திற்கு காரணம் அறியாமையே,ஆசை அல்ல.இந்த அறிவில் ஏற்பட்ட அறியாமையே துன்பத்திற்கு காரணம்.இதை அறிந்து போக்கிக்கொள்வதற்கே இவ்வளவு விளக்கம்.
Download As PDF

கடமை யறியோம்



கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
Download As PDF

பசி வந்தா பத்தும் பறந்திடும்!



பசி வந்தா பத்தும் பறந்திடும்! சொல்லுவாங்களே 
அது என்னனு தெரியுமா?.இவைகள்தாம்.



மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
.
Download As PDF

சிந்தனை துளிகள்..



தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)


உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே 
கஆ வேடுண்ம்.

100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் 

முயடில்விலை,எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் 
கொடண்து மதனினின் ளைமூ.

ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை 

கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து 
முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின 
இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும்.

எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி 

எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே 
உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம்,

நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் 

என்று. உங்ளாகல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், 
பந்ரிதுயுரைகங்ள்!!
Download As PDF

எங்கே நம்பினோமோ அங்கிருந்தே இடி விழுந்தது.



பக்தி என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் பக்தி ஒன்றுக்கும் உபயோகம் ஆகவில்லை.
எங்கே நம்பினோமோ அங்கிருந்தே இடி விழுந்தது.

                                                                 கபீர்தாஸ்
Download As PDF

உண்மையும்,பொய்யும்.


உண்மையை ஒருவனும் நம்புவது இல்லை.
பொய்யை உலகம் நம்புகிறது.
மோரை தெருத்தெருவாய் அலைந்து விற்கிறார்கள்.
கள் உட்கார்ந்த இடத்தில் விற்று போகிறது.
Download As PDF

ஆசையும்,பேராசையும்.



ஒரு பணக்காரர் தன் செல்ல பிராணியாக ஒரு ஆண் நாயை சகல வசதிகளுடன் 
வளர்த்து வந்தார்.அதை தனது மாளிகையின் வாசலில் கட்டிவைத்திருந்தார்.
வாசலின் வெளியில் தெருஓர பெண் நாய் ஒன்று அந்த ஆண் நாயை விரும்பியது,
மேலும் தனது விருப்பத்தை தினமும் அதனிடம் தெரிவித்து வந்தது.

ஆண் நாயோ அதற்கு தகுந்த பதில் தராமல் இருந்ததால் கோபமுற்ற பெண் நாய் 

அதற்கு விளக்கம் கேட்டது.அதற்கு அந்த ஆண் நாயோ நான் தற்போது சிறிது 
குழப்பமான மனநிலையில் இருப்பதால் சற்று பொருத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டது.தங்களின் மனநிலையை தெரிவித்தால் அதற்கு என்னால் 
ஆன உதவி செய்வதாக அந்த பெண் நாய் கூறியது.

அதற்கு அந்த ஆண் நாய் சொன்னது,"அது வேறு ஒன்றுமில்லை... என்னை 

வளர்கும் முதலாளியின் பெண் ஒரு பையனை காதலிக்கிறாள்.அதை அறிந்த 
முதலாளியோ மிகவும் கோபமடைந்து அவளை நோக்கி "உன்னை அவனுக்கு 
கட்டிவைப்பதற்கு பதிலாக நம்வீட்டு நாய்க்கு கட்டிவைப்பேன்" என்று கூறினார்,
அதற்காகத்தான் காத்துகொண்டிருக்கிறேன்.ஒரு வேளை அது நடக்காமல் போனால் 
உன்னை கட்டிக் கொள்கிறேன் என்று கூறியது.

இதிலிருந்து அறியும் விஷயமாவது என்னவென்றால்,
"தெரு நாய் அந்த வீட்டு நாய் மேல் பட்டது ஆசை.ஆனால் 

வீட்டு நாய் தன் முதலாளியின் பெண்ணுக்காக காத்திருந்தது பேராசை.
Download As PDF

ஆனந்தம் என்பது எது தெரியுமா?



ஆனந்தம் என்பது எது தெரியுமா?

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
வெல்ல வேண்டும்.பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். 
பகைவனை அன்பினால் வெல்ல வேண்டும். இவையே 
பண்புடையோரின் நெறிமுறையாகும்.

* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.

* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
மாட்டீர்கள்.

* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
ஆரம்பித்து விடுவீர்கள்.

* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட 
எண்ணம் உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் 
நல்லவனாகி விட முடியாது.

Download As PDF

எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்.



"சொர்க்கமும் நரகமும் உள்ளதா?" 
எனக் கேள்விகேட்ட சாமுராய் போர்வீரனைப் பார்த்து ஜென்குரு, "நீ போர் வீரனா? 

உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறது. எந்த அரசன் உன்னைக் 
காவலனாக ஏற்பான்?" என்றதும் வீரன் கோபமடைந்து வாளை உருவி 
முன்னேறுகிறான்.

குருவும் "இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது" 

என்று கூறி "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார்.அவரின் தைரியம், 
கட்டுப்பாட்டு உணர்ச்சி கண்டு வீரன் வாளை உறையில் போட்டு அவரை 
வணங்கினான். உடனே குருவும் "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன" 
என்றார்.

எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்: நாம் நம்முடைய கோபம், ஆணவம், 

பொறாமை முதலிய எண்ணங்களைக் கைக்கொள்ளும் பொழுது வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறோம். பொறுமை, பணிவு, தன்னடக்கம் முதலிய எண்ணங்களைச் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிவிடுகிறோம்.

நம்முடைய நல்ல பண்புகள் அல்லது தீய பண்புகள் சொர்க்கத்தையும் 

நரகத்தையும் தோற்றுவிக்கின்றன என்பது ஜென்.
Download As PDF

தர்மம்



பூமியில் நான்கு திசையிலும் பயணம் செய்தாலும் 
உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமுடியாது.
ஏனெனில் அந்த தர்மம் உன் உள்ளத்துக்குள் தான் 
ஒளிந்திருக்கிறது.
                                                          ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Download As PDF

அறிவு



அறிவு தெளிவு தரும்.
ஆனால் அறிவினால் ஏற்படும் செருக்கு நரகத்தை தரும்!
Download As PDF

இட்டார் பெரியார்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் 
பட்டாங்கில் உள்ள படி.
நல்வழி.

உலகில் உள்ள சகல நீதிநெறியின்படி ஆராய்ந்து 

பார்த்தால் இரண்டே விதமான ஜாதிகளே உள்ளன.
தன்னிடம் உள்ளதை தருவோர் பெரியோர்.
தராதார் இழிகுலத்தார் என இருவகையே உண்டு.

உள்ளதை தருவோர் என்பது ஓரறிவு  உள்ள 
மரமே தன்னிடம் உள்ள பூ,காய்,கனி,வேர்,மரம் 
அனைத்தையும் தரவல்லது ஆகில்ஆறறிவு 
உள்ள மனிதன் தான் பெற்ற அறிவின் மூலம் 
உலகத்திற்கு எவ்வளவு ஆதாயமாய் விளங்க 
வேண்டும்.மாறாய் நன்றி மறந்தவனாய் 
சுயநலமாய் வாழ்கிறான்.
இவனே இழிகுலத்தோன்.




அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.


பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே.21

காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 19

காய்க்காத மரமும் நீர் இன்றி வற்றிய குளமும்,
கல்லால் ஆன பசுவும்போல் ஈயாத இந்த மனிதரை
ஏன் படைத்தாய்?இறைவனே!

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமரு
க் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !
-பட்டினத்தார்.

ஆக ஈயாதரே இழிகுலத்தோர்.
Download As PDF