Friday, September 4, 2015

அறிதலும் ! புரிதலும் !



அறிதலும் ! புரிதலும் !

ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் வித்யாசம் உண்டு. அறிந்து கொள்வதற்கு அனுபவம் தேவையில்லை! புரிந்துகொள்வதற்கு அனுபவம் தேவை. ஒரு பழத்தின் சுவையை எப்படியெல்லாம் ஏட்டில் புனைந்தாலும் அதன் சுவையை சுவைத்தாலன்றி அறிய இயலாது! மேலும் பழத்தின் சுவையை கொண்டு அதன் வகையும் ஏராளம். அனுபவித்தவனே இதனை புரிந்துகொள்வான். இதையே ஏட்டு சுரைக்காய் கறிக்குதாவது காண்! என்பர். திருமூலர் ஒரு படி மேலே சென்று பின் வருமாறு உரைகின்றார்...

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்எனில் சொல்லுமாறு எங்கனே.

அனுபவத்தை ஒருவர் விளக்கமுடியாது. அனுபவமே உண்மை புரிதலுக்கு ஏற்புடையதாகும்! அறம் பொருள் இன்பம் மூன்றிக்கும் உரையுண்டாம். வீடுபேறேன்பது அனுபவமாகும்!
Download As PDF

Wednesday, September 2, 2015

ஒன்றாக காண்பதே காட்சி !


ஒன்றாக காண்பதே காட்சி !

பொன் அணிகலன்களாக மாறும்போது அதற்கு பல்வேறு பெயர்களும் பயன்பாடுகளும் உண்டு! இருப்பினும் அவை அனைத்தும் மதிப்பிடும் போது தங்கமே!

ஒரு பக்தர் ஒரு விநாயகர் சிலையையும் ஒரு எலி சிலையும் தலா ஒரு கிலோ எடையில் செய்திருந்தார். கஷ்ட காலத்தில் முதலில் எலி சிலையை விற்றார். பின்னர் விநாயகர் சிலையை விற்க வந்தபோது வியாபாரி அதே தொகையை தந்தார்.

அந்த பக்தருக்கு கோபம் வந்து விட்டது. அந்த வியாபாரியிடம் அவர் என்னய்யா நீர் முதலில் அவர் வாகனத்திற்கு தந்த அதே தொகையையே விநாயகருக்கும் தருகிறாய் ! என கேட்டார்.

அதற்கு வியாபாரி இரண்டும் தலா ஒரு கிலோ எடையே கொண்டிருக்கிறது என விளக்கிறார். இங்கே இருவரின் மனோபாவமும் வெவ்வேறு ! உருவங்கள் வெவ்வேறாக இருப்பினும் அவை மதிப்பிலும் தன எடையிலும் ஒன்றே!

அது போன்று காணும் இந்த உலகவும் காண்பவரும் காட்சியும் ஒன்றே ! ( கனவில் காணும் பொருள்களும் காட்சியும் காண்பவனும் ஒருவனே! அது போன்றே விழிப்புற்ற ஒருவருக்கு இந்த உலகமும் கனவே !)
Download As PDF

ஒன்றாக காண்பதே காட்சி !



ஒன்றாக காண்பதே காட்சி !

ஒரு சமயம் ஜனக மகாராஜன் ஒரு கனவு கண்டான். கனவில் அவன் வறியவனாகவும் நீண்ட நாள் பசியில் வாடுவதாய் கண்டான். தனது பிச்சை பாத்திரத்தை கூட ஏந்தும் வலுவு கூட அவன் கைகளுக்கு இல்லை ! ஒரு மகராசி இட்ட உணவை கைகளிலிருந்து கீழே தவறவிட்டார். அருகில் இருத்த நாய் ஒன்று அந்த உணவில் வாய் வைத்து விட்டது .
இதை கண்ட அவருக்கு ஆற்றொணாத கோபமும் அழுகையும் வந்துவிட்டது ! கதறி அழுதவாறு படுக்கையிலிருந்து கீழே விழுந்தார். திடுக்கிட்டு விழித்தார். தான் ஒரு மன்னனாயும் தன் அருகே அறுசுவை உணவு இருப்பதையும் காண்டார்.

கனவில் அவர் கண்ட காட்சிகளும் காணும் வரை உண்மை என்பதையும் உணர்ந்தார். எது உண்மை? என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது ! வசிஷ்டரிடம் தனது நிலையை விளக்கி ஐயனே! கனவு - நினைவு இதில் எது உண்மை என கேட்டார்.

அதற்கு வசிஷ்டர் ஜனகனே ! எந்நிலையிலும் காண்பவன் ஒருபோதும் மாறுவதில்லை!. காட்சிகளே மாறுகின்றன என்பதை அறிந்துகொள். நீ கண்ட கனவிலும் நினைவிலும் அனுபவிப்பவன் ஒருவனே! அவன் ஒருபோதும் மாறுவதில்லை! அனுபவங்கள் மாத்திரமே மாற்றம் அடைகின்றன,

அனுபவிப்பவனாகிய நீ ஒருபோதும் மாறுவதில்லை! எனவே காண்பது ஒருவனே! அந்த மாற்றம் அடையாத தன்மையில் நீ எப்போதும் நிலைதிருப்பாயாக! என ஆசிர்வதித்தார்.
Download As PDF

ஒன்றாக காண்பதே காட்சி.




ஒன்றாக காண்பதே காட்சி !

ஒரு பொருளை காணும் போது 
அதில் காண்பவன், 
காணப்படும் பொருள் இவ்விரண்டை இணைக்கும் காட்சி 
என மூன்று நிலைகள் உண்டு !

தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் பகுத்து உணரும்படி நில்லாமல் அறியப்படும் பொருளில் அழுந்தித் தன்னையும் தனது அறிவையும் மறந்து அப்பொருளோடு ஒன்றுபட்டு நிற்கும்போதே இன்ப நுகர்ச்சி உளதாகும். இவ்வுண்மை உலக இன்பத்திற்கும் பொருந்தும்; பேரின்ப நுகர்ச்சிக்கும் பொருந்தும்.

கனவில் பெண்ணிடம் இன்பம் துய்க்கும் நிலையில் இங்கே காண்பவனும் - காட்சியும் - காணப்படும் பொருள் அனைத்தும் (அவனே ) ஒன்றே!
Download As PDF