Monday, October 14, 2013

அறிவை வணங்குவதே ஆயுத பூஜை!



தமிழும் ஆய்த எழுத்தும்!
தமிழ் எழுத்துக்களில் உயிர் எனவும் மெய் எனவும் உயிர்மெய் மற்றும் ஆய்தம் என எழுத்து வகைகள் உண்டு. இதில் ஆயுத எழுத்து என்பது மூன்று புள்ளிகள் மாத்திரமே! இந்த மூன்று புள்ளிகளை ஏன் ஆயுத எழுத்து என்று அழைத்தனர்? ஆயுதம் என்றால் காப்பது என்று பொருள். இந்த மூன்று புள்ளிகள் எதை காக்கிறது?

அகரம் உதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


அகரம் என்ற சொல்லிற்கு புள்ளி (ஆதியாய் நின்ற அறிவு) என்று பொருள். அதுவே விரிந்து உகரமாகவும் மகரமாகவும் உள்ளது. மூன்றும் ஏகமாய் நின்ற நிலை ஓங்காரமாகும். இந்த மூன்று புள்ளிகளும் சூரிய,சந்திர அக்னி கலைகளை குறிக்கிறது. இந்த அக்னி கலையில் உதித்தவனே வேலாயுத தமிழ் கடவுள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்பது தமிழ் மரபு. உகரமாகிய சந்திர கலை பதினாறாகும். உகரமாகிய அருளில் நின்றதால் குமரன் சக்தி வேலவனானான். எச்செயலையும் தொடங்குவதற்கு முன் பிள்ளையார் சுழியாய் இந்த உகரத்தை இடுவதுண்டு. மேலும் இந்த கலைகளை பற்றிய அறிவே கலாசாரம் எனப்பட்டது.

இந்த மூன்று புள்ளிகளும் ஆதியாய் நின்ற அறிவின் குறியீடுகள் ஆகும். அறிவே கலைகளின் இருப்பிடம். மனிதனை ஞானத்தின் எல்லைக்கு அழைத்து செல்லும் வாயில். ஆயுத பூஜை என்பது ஆயுதங்களை வணக்குவதல்ல! அவற்றை செயல்படுத்தும் அறிவை வணங்குவதே!
Download As PDF