மெய்யறிவும்,மெய்யுணர்வும் ...
அறிவு,உணர்வு என்னும் இரண்டு சொற்கள் ஒரே பொருளை
தருவது போல காணப்படுகிறது.எனினும் சிறிது பொருள்
வேறுபாடு உண்டு.
அறிவு என்பது பொருள்களை திட்டவட்டமாக தெரிந்துகொள்வதை
மட்டுமே குறிக்கும்.அவ்வாறு தெரிந்துகொண்டதோடு நில்லாமல்
தெரிந்துகொண்ட அறிவு தெரிந்துகொள்ளப்பட்ட பொருளிலேயே
அழுந்தி அதன் வண்ணமாய் ஆகி விடுதல் உணர்வை குறிக்கும்.
அனுபவம் என்பது இதுவே.
எனவே "அறிவு" என்பது பொருள் அறிவும்,உணர்வென்பது
அனுபவ அறிவுமாதல் விளங்கும்.பொருள்களை அறிதலோடு
நிற்கின்ற பொருளறிவு முழு அறிவு ஆகாது.குறை அறிவே ஆகும்.ஏனெனில் பொருளை அதனில் அழுந்தி யறியும்பொழுதே
அதனது இயல்பு முற்றும் விளங்கும்.
அவ்வாறன்றித் தான் வேறாகவே நின்று அறியும்பொழுது
அதன் தன்மை முற்றும் விளங்குதல் இல்லை.
அதனால் ,அனுபவ அறிவே -அ ஃதாவது உணர்வே
நிறையறிவாகிறது.
இது பற்றியே உண்மை ஞானம்,தமிழில் "மெய்யறிவு"
எனப்படாமல் "மெய்யுணர்வு" எனப்படுகிறது.