புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார்.
ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர், உங்களைப் போல ஒரு புத்தரை இதுவரை நான் கண்டதில்லை. உங்களைப் போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை.'' என்று புகழ்ந்தார்.
புத்தரும் அவரிடம், ""அருமையாகச் சொன்னீர். இதற்கு முன் வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்,'' என்று கேட்டார். மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.
""அது சரி! பரவாயில்லை! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்?'' என்றார். அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.
அப்போது புத்தர் தெரிந்ததைப் பற்றி பேசுவதும், தெரியாத விஷயத்தில் மவுனம் காப்பதும் தான் சிறந்தது. அறிவிலும் ஞானத்திலும் சிறந்த சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப் போல ஏற்றார்.