ஒவ்வொரு பொருளுக்கும் அதை அடையாளப்படுத்தி
அறிவதற்கே பெயரிடப்படுகிறது.அனைத்தையும்
வகைப்படுத்தி பெயரிட்டவன் மனிதனே.
புல்லினம் முதற்கொண்டு தெய்வீகம் வரை வகைப்படுத்தப்
பட்டு பெயரிடப்பட்டிருகிறது.
பிரசவம் (பிர+சவம்) சவமாகிய இந்த உடலுடன் பிரவேசிக்கும்
மனித உயிருக்கும் பதினாறு நாள்கள் கழித்தே
நாமகரணம் சூட்டும் வழக்கம் நம் மரபில் உண்டு.
நமது கலாசாரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனின்
திருநாமத்தையே பெயராக வைக்கின்றனர்.ஏனெனில் அவனுள்
அந்த தெய்வீக அம்சம் இருப்பதாலேயே.இதனை ஒருவன்
வாழும் காலத்திலேயே அறிந்து அந்த அமரத்துவத்துடன்
ஒன்றவேண்டும் என்பதற்கே.
ஞானசம்பந்தன் என்பது ஒருவன் அறிவுடன் சம்பந்தம்
உடையவன் என்பதற்கே அந்த பெயர்.மாறாக அவன் இந்த
அறிவற்ற (அஞ்ஞான) உடலே தான் என்னும் எண்ணம் கொண்டு
உடலுடன் சம்பந்தமுடையாவனாகவே தன்வாழ்நாள்
முழுவதும் உள்ளான்.
உயிரற்ற உடல் ஒரு அறிவற்ற சடப்பொருளே.
இந்த அறிவற்ற சடத்துடன் தொடர்புள்ளவன் அறிவற்றவனே!
அறிவற்ற இந்த உடலை இயக்கும் அறிவுடை பொருளாகிய
உயிரை (திருவாகிய இறை அம்சத்தை) அறியாதவனாய்
இருக்கிறான்.(நாள்முழுவதும் மூச்சு விட்டும் அதை உணராது
இருப்பதுபோல் பிரக்ஞை அற்று உள்ளான்.)
இந்த உயிரோட்டமான உணர்வே!அறிவே! தான் என்பதை அறிந்தால்
அழியும் உடலுடன் தன்னை பிணைக்காமல்,அழிவற்ற பதமாகிய
அறிவாய் தான் விளங்குவான்.
ஒருவன் இறந்து விட்டால் அவனது பெயர் கெட்டு மீண்டும்
இந்த உடல் சவம்(பிணம்) என்றே அழைக்கப்படுகிறது.
இதுவரை அந்த பெயரை தாங்கி நின்றது எது? என்று
யூகித்து அறிந்து கொள்ளவும்.