Friday, July 29, 2011

வாழ்க்கை!



இங்கே எதை "நீங்கள்" என்று கருதிக்கொண்டீருக்கீர்களோ 
அந்த அகங்காரம் போலியானது.ஒருவேளை நீங்கள் 
அந்த பொய்முகத்துடன் வாழ்வீர்களானால் உங்கள் வாழ்க்கை 
முழுதும் வீணாகிவிடும்.

உங்களின் போலியான அகங்காரத்தை விட்டு வாழ்வீர்களானால்
உண்மையின்,எதார்த்தத்தின் மணம் உங்கள் வாழ்வு முழுவதும் நிறைந்திருக்கும்.

வாழ்கைக்கு ஆரம்பமும் இல்லை.முடிவும் இல்லை.
அது எப்பொழுதும் இருப்பது,வாழ்வே இறைவன்.

அதுவே உங்களுக்கு கொடையளிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம்
விழிப்புணர்வுடன் கூடிய இருதயம் மட்டுமே!

அப்பொழுதுதான் உங்களால் அதை உணர,சுவைக்க,
ஸ்பரிசிக்க முடியும்.மேலும் அந்த வெகுமதி
உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது!

ஆகவே சிந்தியுங்கள்!கருதுங்கள்!பழக்க​ப்படுத்திக்கொள்ளுங்கள்!
Download As PDF

Monday, July 25, 2011

மனித இயல்பும்,இறைவனின் இயல்பும்....

சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு.
ஆனால் அவன் அப்படியே இருக்குமாறு தாய்
விட்டுவிடுவதில்லை.அவனை கழுவி சுத்தப்படுத்துகிறாள்.



பாவம் செய்வது மனித இயல்பு.ஆனால் கருணைக் கடலான 
இறைவனோ மனிதனை அதிலிருந்து மீட்பதற்கான வழிகளையும் 
உருவாக்கி வைத்திருக்கிறான்.


மனிதன் பாவம் செய்வது நிச்சயம்.அனால் அவனை மீட்பதற்கான 
வழிகளை இறைவன் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது அதைவிட 
இரண்டு மடங்கு நிச்சயம்.


இராமகிருஷ்ண பரமஹம்சர்.
Download As PDF