நாம் இந்த உலகில் எதைச் சாதிக்க வேண்டுமானாலும் சரி,
அதற்கு முக்கியமான கருவி உடம்பு.எனவே அதனை நாம்
போற்றிப் பாதுகாக்கப் வேண்டும்.அதாவது உடம்பை நாம்
நேசிக்க வேண்டும்.
"ஆஹா,இது என்ன பிரமாதம்!"என்று கேட்கத் தோன்றும்.
ஒருவன் அதிகமாக நேசிப்பதே அவனது சொந்த உடம்புதானே,
இதில் புதிதாக நேசிப்பதற்கு என்ன உள்ளது என்று சொல்ல தோன்றும்.
ஆனால் இது உண்மை அல்ல,நாம் உடம்பை நேசிப்பதில்லை.
சற்றே யோசித்துப் பாருங்கள்.
நாக்கில் நீர் வடிய,கண்களில் நீர் வடிய காரத்தை உண்ணுகின்றோம்.
கண்களில் நீர் வடிகிறது என்றால் உடம்பு துன்பப்படுகிறது
என்றுதானே பொருள்!.இது உடம்,பை நேசிப்பவன் செய்வதா?
அளவுக்கு அதிகமான புளிப்பு,இனிப்பு,உப்பு பதார்த்தங்களை உண்டு,வயிற்றையும் மற்ற உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வது
உடம்பை நேசிப்பதாலா?
போதை மருந்துகளையும்,மது வகைகளையும் உண்டு,
அந்த பழக்கத்திற்கு அடிமை ஆனவனின் உடம்பு எப்படியெல்லாம்
துடிக்கிறது! இது உடம்பை நேசிக்கிறவன் செய்கின்ற காரியமா?
எனவே நாம் உண்மையில் உடம்பை நேசிப்பதில்லை.நாம்
உடம்பை நேசித்தால் உடம்பு கட்டாயமாக நமது வாழ்க்கைக்கு
சாதகமாக இருக்கும்.
எனவே உடம்பை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.