ஒரு வயதான் மனிதர் தன் மரணப் படுக்கையில் முதலில்
கடவுளைத் தொழ ஆரம்பித்தார். அவர் பெயரை அடக்கடி சொன்னார்.
பிறகு திடீரென்று மாற்றி சாத்தானின் பெயரைச் சொல்ல ஆரம்பித்தார்.
அவ்ருடைய குடும்பத்தினர் இது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
" என்ன உங்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதா?
வாழ்வின் கடைசி நேரத்தில் நீங்கள் சாத்தானின் பெயரை
சொல்லுகிறீர்களே?" என்றார்கள்.
"நான் எந்தவித அபாயத்தையும் இதற்கு பிறகு சந்திக்க விரும்பவில்லை .
நான் இறந்த பிறகு எங்கே செல்வேன் , யாரைச் சந்திப்ப்பேன் என்பது
யாருக்கு தெரியும் ? சாத்தானின் பெயரை சொல்லுவதால் எனக்கு ஒன்றும்
கஷ்டம் ஏற்படப் போவதில்லை.
இருவரில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பெயர்களை உச்சரித்ததால்,
அவர்கள் எனக்கு நன்மை செய்யக்கூடும். அப்படி இருவரையும் சந்திக்க
இயலவில்லை என்றாலும் ஒன்றும் கஷ்டமில்லை. அப்படி இருவரையும்
ஒன்று சேர சந்திக்க நேர்ந்த்தாலும் கவலை இல்லை .நான் எல்லா சாத்தியக்
கூறுகளையும் எண்ணித்தான் இப்பொழுது செயல்படுகிறேன்!". என்றார்
ஓஷோ கூறுகிறார் :
" கடவுள் மற்றும் சாத்தான், நன்மை, தீமை என்ற இரண்டு வேறுபாடுகளால் மனிதன் நசுக்கப்படுகிறான். இப்படி மனிதன் நசுக்கப்படாமலும் அடிமையாக இருக்காமலும் தன் சுதந்திரத்துடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் ."
No comments:
Post a Comment