Friday, April 1, 2011

முட்டாள் தினமும், முட்டாள் கொள்கையும்.



நம் முன்னோர்கள் காலத்தை இயற்கையின் ஓட்டத்தை
அனுசரித்தே வகுத்துவைத்தனர்.இதற்கு இயற்கை கணிதமுறை
என்று பெயர்.

ஒரு நாள் என்பது பூமியின் ஒரு சுழற்சியின் காலம்.ஒரு சுழற்சி
இரவு,பகல் என்ற இருபொழுது கூடியது.ஒரு இரவும் பகலும் சேர்ந்தது
ஒரு நாள்.நாழிகை,மணித்துளிகள் என பல்வேறு அளவு கொண்டாலும்
இரவும் பகலும் பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இயற்கையே.

அதுபோல் ஒரு மாதம் என்பது பதினான்கு வளர்பிறை நாளும்,
பதினான்கு தேய்பிறை நாளும்,பௌர்ணமி மற்றும் அமாவாசை
ஒரு நாட்களும் சேர்த்து மொத்தம் முப்பது நாட்கள் கொண்டது
ஒரு மாதம்.இது பூமியை சந்திரன் சுற்றும் காலஅளவு.

இவ்வாறு பன்னிரு முறை சந்திரன் பூமியை சுற்றியாவாறே
பூமியும்சந்திரனும் சூர்யனின் வட்டப்பாதையை கடப்பது ஒரு
வருடம் எனப்படுகிறது.இதுவும் இயற்கை கணிதமே!

சூரியனின் நீள்வட்ட பாதையில் பூமி வடக்கிலிருந்து தெற்காக
பயணிப்பது தட்சிணாஅயனம்(தெற்கு அல்லது கீழ் நோக்கிய வழி)
என்றும்,(ஆடிமாதம் முதல் கார்த்திகை வரை ),தெற்கிலிருந்து
வடக்காக பயணிப்பது உத்ராஅயனம் (வடக்கு அல்லது மேல்
நோக்கிய வழி)என்றும் பொருள்படும்.(மார்கழி மாதம் முதல்
ஆனி வரை.)

சூரியனின் நீள்வட்ட பாதையில் இரவு பகலும் சரியாக உள்ள கால
அளவு சித்திரை மாதம் மற்றும் ஐப்பசி மாதம் சரியாக இருப்பதால்
கோடைத் துவக்கத்தையே ஆண்டின் முதற்பாகமாக கொள்வது
உலக வழக்காகிற்று.


கிரேக்க நாகரிக்கத்தில் அப்போலோ என்ற சொல் சூரியனை குறிக்கும்.
ஏப்ரல் மாதம் ஆண்டின் துவக்கமாக கொண்டனர்.பல்வேறு
நாகரீகத்திலும் இந்த இயற்கை கணிதத்தை ஒட்டியே ஆண்டின்
துவக்கமாக ஏப்ரல் அமைந்தது.16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின்
பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயேபுத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு
வந்தது.

பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான
13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை
ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை
நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.


ஏனெனில் ஏசு கிறிஸ்து டிசெம்பர் மாதம் 25ஆம் பிறந்ததால்
அதன்பிறகு கிறிஸ்து ஆண்டு கணக்கிடப்படுவதால் இனி ஜனவரியே
மாதமே தொடக்கமாக கொள்ளவேண்டும்.ஏற்றுகொள்ளாதவர்கள்
முட்டாள்கள் என்றழைக்கப்பட்டனர்.இதுவே முட்டாள்கள்
தின பிறப்பின் ரகசியம்.

இன்றும் வருடத்தின் கடைசியாக (year endinng) மார்ச் 31
உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

தீர்ப்பை தங்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.
Download As PDF

No comments: