சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.
நல்வழி.
உலகில் உள்ள சகல நீதிநெறியின்படி ஆராய்ந்து
பார்த்தால் இரண்டே விதமான ஜாதிகளே உள்ளன.
தன்னிடம் உள்ளதை தருவோர் பெரியோர்.
தராதார் இழிகுலத்தார் என இருவகையே உண்டு.
உள்ளதை தருவோர் என்பது ஓரறிவு உள்ள
மரமே தன்னிடம் உள்ள பூ,காய்,கனி,வேர்,மரம்
அனைத்தையும் தரவல்லது ஆகில்ஆறறிவு
உள்ள மனிதன் தான் பெற்ற அறிவின் மூலம்
உலகத்திற்கு எவ்வளவு ஆதாயமாய் விளங்க
வேண்டும்.மாறாய் நன்றி மறந்தவனாய்
சுயநலமாய் வாழ்கிறான்.
இவனே இழிகுலத்தோன்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.
பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே.21
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 19
காய்க்காத மரமும் நீர் இன்றி வற்றிய குளமும்,
கல்லால் ஆன பசுவும்போல் ஈயாத இந்த மனிதரை
ஏன் படைத்தாய்?இறைவனே!
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !
-பட்டினத்தார்.
ஆக ஈயாதரே இழிகுலத்தோர்.
No comments:
Post a Comment