கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்
கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயனாகும்
பரிவு சொல்லித் தழிவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே!
விவேக சிந்தாமணி.
கருத்தில் கொள்ளவேண்டிய நூற்களை கல்லாதவன் மூடனாவான்.
அளவறிந்து பேசதெரியாதவன் மடையனாவான்.
ஒரு தொழிலையும் செய்யாதவன் தரித்திரியனாவான்.
ஒன்றுக்கும் உதவாதவன் வீணன் ஆவான்.
கற்றறிந்த பெரியோர்கள் முன் தான் கொண்ட கருத்துக்களை
பேச அஞ்சி மரத்தைப்போல் உள்ளவன் பேயனாவான்.
உள்ளொன்று வைத்து புறமொன்று நடிப்பவன் ஏமாற்றுகாரனாவான்.
பிறர்பசியை தன்பசி போல் கருதி இடாமல் உண்ணுபவன் பாவியாமே!
No comments:
Post a Comment