துன்பத்திற்கு காரணம் ஆசையே என்றார் புத்தர்.
ஆனால் ஆசை ஒரு உபகாரணமே ஒழிய அது முதற்காரணம் அல்ல.
ஆசைக்கு மூலகாரணம் அறியாமையே என்பது சித்தாந்தம்.
இதை ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்குவோம்.கட்டிய வீட்டின் சுவற்றில்
விரிசல் ஏற்பட்டால் சாதரணமாக விரிசல் ஏற்பட்ட இடத்தில் பூசுவேலை மாத்திரம் செய்வதுண்டு.விரசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய முற்படுவதில்லை.
உண்மையில் கட்டிடத்தை தாங்கும் தூண்களின் பலஹினமே விரிசலுக்கு
காரணம்.விரிசல் என்பது கோளாறு இல்லை.அது வெறும் கோளாறின்
வெளிப்பாடே.தாங்கும் தூண்களின் பலஹினமே உண்மை காரணம்.அதுபோல
உடலில் தோன்றும் காய்ச்சலும் நோயின் வெளிபாடே அல்லாமல் காய்ச்சல்
என்பது நோயல்ல.காய்ச்சலின் மூலமறிந்து அதற்குதான் மருந்தளிக்க வேண்டும்.
இவ்வாறே துன்பத்திற்கு காரணம் அறியாமையே,ஆசை அல்ல.இந்த அறிவில் ஏற்பட்ட அறியாமையே துன்பத்திற்கு காரணம்.இதை அறிந்து போக்கிக்கொள்வதற்கே இவ்வளவு விளக்கம்.
No comments:
Post a Comment