Sunday, March 27, 2011

எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்.



"சொர்க்கமும் நரகமும் உள்ளதா?" 
எனக் கேள்விகேட்ட சாமுராய் போர்வீரனைப் பார்த்து ஜென்குரு, "நீ போர் வீரனா? 

உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறது. எந்த அரசன் உன்னைக் 
காவலனாக ஏற்பான்?" என்றதும் வீரன் கோபமடைந்து வாளை உருவி 
முன்னேறுகிறான்.

குருவும் "இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது" 

என்று கூறி "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார்.அவரின் தைரியம், 
கட்டுப்பாட்டு உணர்ச்சி கண்டு வீரன் வாளை உறையில் போட்டு அவரை 
வணங்கினான். உடனே குருவும் "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன" 
என்றார்.

எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்: நாம் நம்முடைய கோபம், ஆணவம், 

பொறாமை முதலிய எண்ணங்களைக் கைக்கொள்ளும் பொழுது வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறோம். பொறுமை, பணிவு, தன்னடக்கம் முதலிய எண்ணங்களைச் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிவிடுகிறோம்.

நம்முடைய நல்ல பண்புகள் அல்லது தீய பண்புகள் சொர்க்கத்தையும் 

நரகத்தையும் தோற்றுவிக்கின்றன என்பது ஜென்.
Download As PDF

No comments: