Saturday, March 26, 2011

சும்மா இருந்து சுகம் பெற !

கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங்
காரணங் கண்டுசும் மாதான்
வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம்
வருந்தினேன் மதியின்மை தீர்ப்பார்
ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர்
உலகவர் பன்னெறி எனக்குப்
பொருத்தமோ சொல்லாய் மெளனசற் குருவே
போற்றிநின் பொன்னடிப் போதே.

                                                 தாயுமானவர்.

அறிவுக்கு அறிவாய் நீ இருந்து உணர்த்துகிற
காரணத்தை அறிந்து சும்மா இருப்பதன்றி
வீண் கவலைகளால் சுகத்தை இழந்து
வருந்தினேன். என் அறியாமையை தீர்ப்பவர் யாராவது
ஒருவர் உளரோ?உள்ளம் படும் வேதனையை உணர்பவர் யார்?
இவ்வுலகத்தார் உன்னை அடையகூறும் பலவிதநெறிகள் எனக்கு
பொருந்துமோ சொல்வாயோ என் உள்ளத்துள் மௌனமாய் விளங்கும் வழியே
உன் திருவடிகளையே நினைந்து நிற்கிறேன்
வழி அருள்வாயே!
Download As PDF

No comments: