எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை.
மனிதன் இயல்பில் கொடியவன் அல்லன்.அவன் இயல்பிலேயே தூயவன்,
முற்றிலும் புனிதமானவன்.ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவான்.
நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள்தான்.
இந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறியாமையே நம்மைக் கட்டுண்டவர்களாக ஆக்கியிருக்கிறது.
எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம்.
எல்லா கொடுமைகளுக்கும் அறியாமையே காரணம்.
அறிவு,உலகை நல்லதாக்குகிறது.அறிவு எல்லா துன்பங்களையும் ஒழிக்கிறது.
அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது.உண்மைஅறிவின் கருத்து இதுவே.
அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது!
எந்த அறிவு? வேதியலா?இயற்பியலா?வான இயலா?பூமியியலா?
அவை எல்லாம் சிறிது உதவுகிறது.மிக சிறிதளவே உதவுகின்றன.
ஆனால் முக்கியமான அறிவு என்பது உங்கள் இயல்பே."உன்னை அறிந்து கொள்.
"நீங்கள் உண்மையில் யார்?உங்கள் உண்மை இயல்பு எது என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும்.அந்த எல்லையற்ற இயல்பை உங்களுக்குள் உணரவேண்டும்.
இந்த ஆன்மாவை(உண்மை இயல்பை) அறிய பல்வேறு வழிகள் உள்ளன.
பகுத்தறிவுபூர்வமான ஆராய்ச்சி மட்டுமே,பகுத்தறிவு மட்டுமே ஆன்மீக
உணர்வு நிலைக்கு உயர்ந்து,நாம் யார் என்பதை நமக்கு காட்டுகிறது.
இங்கே வெறுமனே நம்புவது என்ற பேச்சிற்கே இடம் இல்லை.எதையும்
நம்பாதீர்கள்-ஞானியின் கருத்து இதுவே.
எதையும் நம்பாதீர்கள்,ஒவ்வொன்றையும் நம்புவதிலிருந்து விடுபடுங்கள்.
இதுவே முதற்படி.அறிவுபூர்வமானவராக இருக்க துணிவு கொள்ளுங்கள்.
விவேகம் எங்கே அழைத்துச் சென்றாலும் அங்கு செல்ல துணிவுக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment