Saturday, March 26, 2011

முன்னோர்களின் காலத்தை பற்றிய விஞ்ஞானம்.

காலத்தை பற்றிய நம் முன்னோர்களின் சிந்தனை வியப்பிற்குரியது.அவைகள் இதோ உங்களின் பார்வைக்கு.....

காலம் அளவுகள் - தெறிப்பளவு-1

2 கண்ணிமை - 1 நொடி
2 கை நொடி - 1 மாத்திரை
2 மாத்திரை - 1 குரு
2 குரு - 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 விநாடி
60 விநாடி - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 ஓரை
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
15 நாள் - 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
60 ஆண்டுகள் - 1 வட்டம்


காலம் அளவுகள் - தெறிப்பளவு-2


1 நாழிகை = 24 நிமிடம்
2.5 நாழிகை = 1 மணி
3.75 நாழிகை = 1 முகூர்த்தம்
7.5 நாழிகை = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது / பருவம்
3 ருது / பருவம் = 1 அயனம்
2 அயனம் = 1 வருடம்


காலம் அளவுகள் - தெறிப்பளவு-3

1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 நாழிகை = 60 விநாழிகை
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்
1 விநாழிகை = 60 லிப்தம்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 60 பரா
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பரா
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிக
ள்
Download As PDF

No comments: