Monday, January 30, 2012

குரங்கு பிடி!



குரங்கை பிடிபதற்கென்று பிரத்யேகமான சில முறைகள் உள்ளன.அவற்றுள் ஒன்று,ஒரு பெரிய அளவிலான இளநீரில் அதன் கை செல்லும் அளவு துளையிட்டு வைப்பார்கள்.எதிர்பார்த்தபடி குரங்கு வரும்.அதன் உள்ளே கையை விட்டு வழுக்கையை சுரண்டும் கையளவு கிடைத்ததும் அப்படியே எடுக்க முயற்சிக்கும்.கையை எடுக்க வராது.அதன் பிடியை ஒருபோதும் தளர்த்தாது.அவ்வளவுதான்!அதனால் வேகமாக ஓடவோ தாவவோ முடியாது.
பிடிப்பது மிக சுலபமாகிவிடும்.

ஒருவிதத்தில் நாமும் இந்த குரங்கு மாதிரிதான்.வாழ்க்கை சக்கரத்தில் இந்த உடலேயே  நாம் என்று நம்பி இதன்மேல் உள்ள அபிமானத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.அதன் மேல் உள்ள அபிமானத்தை (நான் என்பது இந்த உடலே என்று கருதுவது) விலக்கி உண்மையை புரிந்து கொண்டால் உங்களின் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது.இல்லாவிட்டால் காலனின் கையில் சிக்கும் இந்த உடலே நாம் என்று எண்ணி இறக்க நேரிடும்.
Download As PDF

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான வாழ்வியல் தத்துவம்..

கூடல் பாலா said...

உலகம் அறியவேண்டிய உண்மை இது ...அருமை!