Friday, May 27, 2011

அன்பு வலையில் அகப்படும் ஆண்டவன்.


இறைவனை அடைந்த நாயன்மார்களின் வரலாற்றை பார்த்தால் அவர்கள் அவன்பால் கொண்ட அன்பாலே இறைவனை

அடைந்தனர் என்பதை அறியலாம்.

பூஜை,புனஸ்காரங்கள் இன்றி தன் அன்றாட வாழ்கையை மிக எளிமையாய் தங்களால் இயன்ற செயல்களை செய்துக் கொண்டு 

அன்பு ஒன்றையே அவன்பால் செலுத்தி இறையடியை அடைந்தனர்.

அதிபத்தர் ஒரு மீனவர்.தன் வலையில் அகப்படும் முதல் மீனை 
இறைவனுக்கு அன்புக்காணிக்கையாக அளிப்பதை 
வழக்கமாக கொண்டிருந்தார்.



கடுமையான பஞ்சத்திலும் தனக்கு கிடைத்த ஒரு மீனையும் இறைவனுக்கு காணிக்கையை
Download As PDF

Thursday, May 26, 2011

அறிந்தவை ஒரு சுமையே!



நீங்கள் புதிதாக ஒன்றை அறிய ஆவல் கொண்டால்
அதற்கான பயணத்தை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.

அப்பயணத்தில் முக்கியமாக முன்பே சேகரித்து
வைக்கப்பட்ட அறிவு முழுமையாக துறக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஏனெனில் அறிவின் மூலமாகவும்,நம்பிக்கையின் மூலமாகவும்,
அனுபவங்களை பெறுதல் எளிது.ஆனால் அத்தகைய அனுபவங்கள் நம் 
மனோபிம்பங்களின் விளைவே.
                                                       எனவே அவை முற்றிலும் நிஜமற்றது.......பொய்.

நீங்கள் புதிதாக ஒன்றை அறிய வேண்டுமெனில்,பழமையின் சுமையை,

Download As PDF

Wednesday, May 25, 2011

ஞானப்பழம் நீயே!



கொய்யக்கூடிய கனியை ஏன் "கொய்யா கனி" ?
என்று பெயரிட்டனர் என்று சிந்திப்பதே அறிவுடைமை ஆகும்.
நாம் இவ்வாறு சிந்தித்து கேள்வி கேட்பதற்கே 
இது மாதிரியான பெயர்களை சான்றோர்கள் இட்டிருக்கிறனர்.

பட்டினத்தார் பாடலில்
 
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்
கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து
கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே
முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.”


என்பதில் வேறு ஒருவருக்கும் "எட்டாத புட்பம்"
என்ற வார்த்தை உள்ளதல்லவா! பூவே எட்டாது 
எனில் அதிலிருந்து வெளியாகும் கனி எப்படி எட்டும்?
                                                        மாம்பழம்,நாவல்பழம்,எழுமிச்சைபழம்,பலா,வா
ழை,பேரிட்சை,
திராட்சை,மாதுளை,கமலா,சீதா போன்ற பலபெயர்கள் அந்தந்த பழதிற்குரியதா?என்று சிந்தித்துபாருங்கள்.

உ.தா:எழும்+இச்சை+பழம்=எழுமிச்சை பழம்.
இச்சை இந்த பழத்திலா எழுகிறது?
பின் இச்சை எழும் இடம் எங்கே உள்ளது?

பேரிட்சை பழத்தில் தங்களுக்கு அப்படி என்ன 
பெரிய இச்சை?

மாதுளையில் ஒரு சிறு துவாரம் கூட 
காணவில்லையே?பின் மா துளை என்றால்?

இவை அனைத்தும் ஒன்றை சுட்டிக்காட்டவே 
இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன.அனைத்தும் 
சிந்தித்து கேள்வி கேட்கவே.

நண்பர்களே!
தங்களின் அறிவை சோதிப்பதல்ல என் நோக்கம்.தெரிந்ததை 
தங்களுடன் பகிர்ந்துக் கொள்வே அடியேனின் இச்சிறு முயற்சி.

"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?"எனக் 
கேட்ட சிறுவன்,பின்அப்பழதில் உள்ள மண்ணை ஊதியதற்காகக் 
"என்ன அவ்வையே பழம் சுடுகிறதா?" என கேட்டால் 
அந்த விளக்கத்தை அவ்வை ஏற்றுக் கொண்டிருப்பாரா?

உண்மையில் "சுடுகின்ற பழத்தை" அல்லவா காட்டி இருக்கவேண்டும்.
நாவல் கனிகல்லவா விளக்கம் தந்திருக்க வேண்டும்?
விளக்கம் தந்தது தமிழ் கடவுளல்லவா?
பொய்யான விளக்கத்திற்கு அவ்வை செவி சாய்திருப்பாளா?

பழமையான வார்த்தைகளெல்லாம் பழமொழியாகிவிடாது.
மெய்ஞானப் பழத்திலிருந்து வெளியானவையே பழமொழிகள்.
அவையே கனி மொழியாகும்.

கனிந்த என்றால் நன்கு பக்குவப்பட்டு முதிர்ந்த பொருள் 
என்று பொருள்படும்.ஞானமெனப்பட்ட அறிவும் முற்றறிவாகும்.
முதிர்ந்த முற்றறிவு என்பதற்கே அது கனியுடன் ஒப்பிடப்பட்டது.


திருவிளையாடல் புராணத்தில்-


எவருக்குமே கிடைக்காத(எளிதில் அடையதக்கதன்று) 
ஞானம்
(அறிவு/பழம்)ஒன்றுள்ளது.அது இரண்டாக பகுக்க முடியாதது.
(நீ வேறு!அது வேறு என்று பிரிக்க முடியாதது).

அதை இந்த உலக அறிவால் (கண்,காது,மூக்கு,நாக்கு,மெய்,மனம் 
கொண்டு அறியப்படும் அறிவால்)அறிய இயலாது.

முதல் பொருளாய் உதித்த "நான்" என்னும் உணர்விற்கு ஆதாரமாய் 
விளங்கும் சத்து,சித்தான(பேரிருப்பும்,பேரறிவுமான/சிவசக்தியான/
அம்மையப்பரான)திருவருளில் இருந்தே அதை இருந்துணர வேண்டும்.

அந்த ஞானம் வெளியில் உள்ளதன்று.
நீயே அதுவாய் விளங்குகிறாய் என்பதே பழம் நீ( பழனி).


அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.


தலையை "கொய்தான்" என்றால் தலை வேறு முண்டம் வேறாக 
பிரித்துவிட்டான் என்று பொருள்.ஆனால் உன்னிலிருந்து அறிவை 
தனியே பிரிக்க முடியாது!ஏனெனில் நீயே அறிவாய் விளங்குவதால்!

எவருக்கும் எட்டா கனி அறிவாதலால் 
அதுவே கொய்யா கனியாகும்.


Download As PDF

Saturday, May 21, 2011

பெயரை தாங்கி நின்றது எது?



ஒவ்வொரு பொருளுக்கும் அதை அடையாளப்படுத்தி 
அறிவதற்கே பெயரிடப்படுகிறது.அனைத்தையும் 
வகைப்படுத்தி பெயரிட்டவன் மனிதனே.

புல்லினம் முதற்கொண்டு தெய்வீகம் வரை வகைப்படுத்தப் 
பட்டு பெயரிடப்பட்டிருகிறது.

பிரசவம் (பிர+சவம்) சவமாகிய இந்த உடலுடன் பிரவேசிக்கும் 
மனித உயிருக்கும் பதினாறு நாள்கள் கழித்தே 
நாமகரணம் சூட்டும் வழக்கம் நம் மரபில் உண்டு. 

நமது கலாசாரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனின் 
திருநாமத்தையே பெயராக வைக்கின்றனர்.ஏனெனில் அவனுள் 
அந்த தெய்வீக அம்சம் இருப்பதாலேயே.இதனை ஒருவன் 
வாழும் காலத்திலேயே  அறிந்து அந்த அமரத்துவத்துடன் 
ஒன்றவேண்டும் என்பதற்கே.

ஞானசம்பந்தன் என்பது ஒருவன் அறிவுடன் சம்பந்தம் 
உடையவன் என்பதற்கே அந்த பெயர்.மாறாக அவன் இந்த 
அறிவற்ற (அஞ்ஞான) உடலே தான் என்னும் எண்ணம் கொண்டு 
உடலுடன் சம்பந்தமுடையாவனாகவே தன்வாழ்நாள் 
முழுவதும்  உள்ளான்.

உயிரற்ற உடல் ஒரு அறிவற்ற சடப்பொருளே.
இந்த அறிவற்ற சடத்துடன் தொடர்புள்ளவன் அறிவற்றவனே!

அறிவற்ற இந்த உடலை இயக்கும் அறிவுடை பொருளாகிய 
உயிரை (திருவாகிய இறை அம்சத்தை) அறியாதவனாய் 
இருக்கிறான்.(நாள்முழுவதும் மூச்சு விட்டும் அதை உணராது 
இருப்பதுபோல் பிரக்ஞை அற்று உள்ளான்.)

இந்த உயிரோட்டமான உணர்வே!அறிவே! தான் என்பதை அறிந்தால் 
அழியும் உடலுடன் தன்னை பிணைக்காமல்,அழிவற்ற பதமாகிய 
அறிவாய் தான் விளங்குவான்.

ஒருவன் இறந்து விட்டால் அவனது பெயர் கெட்டு மீண்டும் 
இந்த உடல் சவம்(பிணம்) என்றே அழைக்கப்படுகிறது.

இதுவரை அந்த பெயரை தாங்கி நின்றது எது? என்று 
யூகித்து அறிந்து கொள்ளவும். 
   
   
Download As PDF

Thursday, May 19, 2011

மனிதன் தன் எண்ணங்களாலேயே வாழ்கிறான்.



ஒரு வயதான் மனிதர் தன் மரணப் படுக்கையில் முதலில் 
கடவுளைத் தொழ ஆரம்பித்தார். அவர் பெயரை அடக்கடி சொன்னார்.
பிறகு திடீரென்று மாற்றி சாத்தானின் பெயரைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவ்ருடைய குடும்பத்தினர் இது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

" என்ன உங்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதா? 

வாழ்வின் கடைசி நேரத்தில் நீங்கள் சாத்தானின் பெயரை 
சொல்லுகிறீர்களே?" என்றார்கள்.

"நான் எந்தவித அபாயத்தையும் இதற்கு பிறகு சந்திக்க விரும்பவில்லை . 

நான் இறந்த பிறகு எங்கே செல்வேன் , யாரைச் சந்திப்ப்பேன் என்பது 
யாருக்கு தெரியும் ? சாத்தானின் பெயரை சொல்லுவதால் எனக்கு ஒன்றும் 
கஷ்டம் ஏற்படப் போவதில்லை.

இருவரில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பெயர்களை உச்சரித்ததால், 

அவர்கள் எனக்கு நன்மை செய்யக்கூடும். அப்படி இருவரையும் சந்திக்க 
இயலவில்லை என்றாலும் ஒன்றும் கஷ்டமில்லை. அப்படி இருவரையும் 
ஒன்று சேர சந்திக்க நேர்ந்த்தாலும் கவலை இல்லை .நான் எல்லா சாத்தியக் 
கூறுகளையும் எண்ணித்தான் இப்பொழுது செயல்படுகிறேன்!". என்றார்

ஓஷோ கூறுகிறார் :
" கடவுள் மற்றும் சாத்தான், நன்மை, தீமை என்ற இரண்டு வேறுபாடுகளால் மனிதன் நசுக்கப்படுகிறான். இப்படி மனிதன் நசுக்கப்படாமலும் அடிமையாக இருக்காமலும் தன் சுதந்திரத்துடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் ."
Download As PDF

ஒப்பிடுவது சாத்தியமில்லை.



பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிரீர்கள்.
அது ஒருபோதும் எந்த இன்பத்தையும் தராது.
அது வன்முறையானது.அழிவு பயப்பது.

புத்திசாலி மனிதன் பேராசை கொள்வதில்லை.
மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி
அவர் சாதாரணமாக வாழ்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை
அவர் அறிவார்.அவர் ஒரு போதும் பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.
ஒருபோதும் தன்னை மேல் என்றோ ,கீழ் என்றோ அவர் எண்ணுவதில்லை.



அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,
தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.

ரோஜாவை தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?
எல்லா ஒப்பீடுகளின் துவக்குமுமே தவறாக உள்ளன.
ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார்.

இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.

அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன?
உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே 

பேராசையின் பொருள்.

மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும்.

இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?
Download As PDF

அறிவு என்னும் கதவு திறந்திருந்தால்...



சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.

''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி
என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே 

ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி 
சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.

அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,

''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?
அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து 
விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.

''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து 

விட்டால் என் புறாக்கள் எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் 

திறக்காமல் துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான்.

அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை 

எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம்.

திறந்திருந்தால் அறியாமை வெளியேறியிருக்கும்.

அன்பால் உங்கள் உள்ளம் நிறைந்திருக்கும்.
Download As PDF