Wednesday, May 25, 2011

ஞானப்பழம் நீயே!



கொய்யக்கூடிய கனியை ஏன் "கொய்யா கனி" ?
என்று பெயரிட்டனர் என்று சிந்திப்பதே அறிவுடைமை ஆகும்.
நாம் இவ்வாறு சிந்தித்து கேள்வி கேட்பதற்கே 
இது மாதிரியான பெயர்களை சான்றோர்கள் இட்டிருக்கிறனர்.

பட்டினத்தார் பாடலில்
 
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்
கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து
கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே
முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.”


என்பதில் வேறு ஒருவருக்கும் "எட்டாத புட்பம்"
என்ற வார்த்தை உள்ளதல்லவா! பூவே எட்டாது 
எனில் அதிலிருந்து வெளியாகும் கனி எப்படி எட்டும்?
                                                        மாம்பழம்,நாவல்பழம்,எழுமிச்சைபழம்,பலா,வா
ழை,பேரிட்சை,
திராட்சை,மாதுளை,கமலா,சீதா போன்ற பலபெயர்கள் அந்தந்த பழதிற்குரியதா?என்று சிந்தித்துபாருங்கள்.

உ.தா:எழும்+இச்சை+பழம்=எழுமிச்சை பழம்.
இச்சை இந்த பழத்திலா எழுகிறது?
பின் இச்சை எழும் இடம் எங்கே உள்ளது?

பேரிட்சை பழத்தில் தங்களுக்கு அப்படி என்ன 
பெரிய இச்சை?

மாதுளையில் ஒரு சிறு துவாரம் கூட 
காணவில்லையே?பின் மா துளை என்றால்?

இவை அனைத்தும் ஒன்றை சுட்டிக்காட்டவே 
இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன.அனைத்தும் 
சிந்தித்து கேள்வி கேட்கவே.

நண்பர்களே!
தங்களின் அறிவை சோதிப்பதல்ல என் நோக்கம்.தெரிந்ததை 
தங்களுடன் பகிர்ந்துக் கொள்வே அடியேனின் இச்சிறு முயற்சி.

"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?"எனக் 
கேட்ட சிறுவன்,பின்அப்பழதில் உள்ள மண்ணை ஊதியதற்காகக் 
"என்ன அவ்வையே பழம் சுடுகிறதா?" என கேட்டால் 
அந்த விளக்கத்தை அவ்வை ஏற்றுக் கொண்டிருப்பாரா?

உண்மையில் "சுடுகின்ற பழத்தை" அல்லவா காட்டி இருக்கவேண்டும்.
நாவல் கனிகல்லவா விளக்கம் தந்திருக்க வேண்டும்?
விளக்கம் தந்தது தமிழ் கடவுளல்லவா?
பொய்யான விளக்கத்திற்கு அவ்வை செவி சாய்திருப்பாளா?

பழமையான வார்த்தைகளெல்லாம் பழமொழியாகிவிடாது.
மெய்ஞானப் பழத்திலிருந்து வெளியானவையே பழமொழிகள்.
அவையே கனி மொழியாகும்.

கனிந்த என்றால் நன்கு பக்குவப்பட்டு முதிர்ந்த பொருள் 
என்று பொருள்படும்.ஞானமெனப்பட்ட அறிவும் முற்றறிவாகும்.
முதிர்ந்த முற்றறிவு என்பதற்கே அது கனியுடன் ஒப்பிடப்பட்டது.


திருவிளையாடல் புராணத்தில்-


எவருக்குமே கிடைக்காத(எளிதில் அடையதக்கதன்று) 
ஞானம்
(அறிவு/பழம்)ஒன்றுள்ளது.அது இரண்டாக பகுக்க முடியாதது.
(நீ வேறு!அது வேறு என்று பிரிக்க முடியாதது).

அதை இந்த உலக அறிவால் (கண்,காது,மூக்கு,நாக்கு,மெய்,மனம் 
கொண்டு அறியப்படும் அறிவால்)அறிய இயலாது.

முதல் பொருளாய் உதித்த "நான்" என்னும் உணர்விற்கு ஆதாரமாய் 
விளங்கும் சத்து,சித்தான(பேரிருப்பும்,பேரறிவுமான/சிவசக்தியான/
அம்மையப்பரான)திருவருளில் இருந்தே அதை இருந்துணர வேண்டும்.

அந்த ஞானம் வெளியில் உள்ளதன்று.
நீயே அதுவாய் விளங்குகிறாய் என்பதே பழம் நீ( பழனி).


அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.


தலையை "கொய்தான்" என்றால் தலை வேறு முண்டம் வேறாக 
பிரித்துவிட்டான் என்று பொருள்.ஆனால் உன்னிலிருந்து அறிவை 
தனியே பிரிக்க முடியாது!ஏனெனில் நீயே அறிவாய் விளங்குவதால்!

எவருக்கும் எட்டா கனி அறிவாதலால் 
அதுவே கொய்யா கனியாகும்.


Download As PDF

No comments: