Thursday, May 26, 2011

அறிந்தவை ஒரு சுமையே!



நீங்கள் புதிதாக ஒன்றை அறிய ஆவல் கொண்டால்
அதற்கான பயணத்தை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.

அப்பயணத்தில் முக்கியமாக முன்பே சேகரித்து
வைக்கப்பட்ட அறிவு முழுமையாக துறக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஏனெனில் அறிவின் மூலமாகவும்,நம்பிக்கையின் மூலமாகவும்,
அனுபவங்களை பெறுதல் எளிது.ஆனால் அத்தகைய அனுபவங்கள் நம் 
மனோபிம்பங்களின் விளைவே.
                                                       எனவே அவை முற்றிலும் நிஜமற்றது.......பொய்.

நீங்கள் புதிதாக ஒன்றை அறிய வேண்டுமெனில்,பழமையின் சுமையை,


முக்கியமாக அறிந்து வைக்கப்பட்ட அறிவின் சுமையை தூக்கிச் செல்லலாகாது.
அவ்வறிவு எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதரின் அறிவாக இருப்பினும் சரி.

நீங்கள் அறிவை சுய வெளிப்பாட்டிற்கும்,உங்கள் பாதுகாப்பிற்கும் 

ஒரு கருவியாக பயன்படுத்துகிறீர்கள்.மற்றும் உங்கள் அனுபவங்கள்,
புத்தருக்கும்,ஏசுவிற்கும்,வேறு நபர் ஒருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களைப் 
போன்றதே என்று நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்.

ஆனால் அறிவினால் தன்னை பாதுகாத்துக்
கொள்ளும் மனிதன்,உண்மையை தேடுபவன் அல்ல
.

                                                                                                           
Download As PDF

No comments: