இறைவனை அடைந்த நாயன்மார்களின் வரலாற்றை பார்த்தால் அவர்கள் அவன்பால் கொண்ட அன்பாலே இறைவனை
அடைந்தனர் என்பதை அறியலாம்.
பூஜை,புனஸ்காரங்கள் இன்றி தன் அன்றாட வாழ்கையை மிக எளிமையாய் தங்களால் இயன்ற செயல்களை செய்துக் கொண்டு
அன்பு ஒன்றையே அவன்பால் செலுத்தி இறையடியை அடைந்தனர்.
அதிபத்தர் ஒரு மீனவர்.தன் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்கு அன்புக்காணிக்கையாக அளிப்பதை
வழக்கமாக கொண்டிருந்தார்.
கடுமையான பஞ்சத்திலும் தனக்கு கிடைத்த ஒரு மீனையும் இறைவனுக்கு காணிக்கையை
அர்ப்பணித்துவிட்டு,தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார்.
அவரின் மனஉறுதியை சோதிக்க விரும்பிய இறைவன் ஒரு பொன்மீனை முதல்மீனாக அவர் வலையில் விழச் செய்தான். ஆனால் அதிபத்தர் சிறிதும் தயங்காது அந்த பொன்மீனை கடலில் விட்டார்.மாறாத அன்புள்ளத்தை கண்ட இறைவன் அவர் வலையில் விழுந்தான்!
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.
No comments:
Post a Comment