Monday, April 4, 2011

கோபமும்,விரோதமும்



ஐநூறு வருசத்தின் முன்பாக ஒரு மாமன்னரின் அரண்மனைக்கு பௌத்த 
துறவி ஒருவர் வந்திருக்கிறார். மன்னர் அவரை வரவேற்று தனக்கு ஏதாவது 
உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார்.

உடனே துறவி நன்றாக உறங்குங்கள் என்று ஆசி தந்திருக்கிறார். 

மன்னர் என்ன இது உறங்க சொல்லி ஆசி தருகிறாரே என்ற தயக்கத்துடன் 
தான் ஏற்கனவே நிறைய நேரம் உறங்குவதாகவும், அதனால் தான் கவனிக்கபட 
வேண்டிய பல பணிகள் தாமதமாகின்றன என்பதால் தான் அதிகாலையில் எழுந்து 
பின்னிரவு வரை விழித்து வேலை செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார். 

உடனே துறவி இல்லை மன்னர் எவ்வளவு அதிகமான நேரம் தூங்குகின்றாரோ 

அவ்வளவு மக்களுக்கு நல்லது என்றார். மன்னருக்கு கோபம் வந்துவிடவே முட்டாள் 
போல பேசாதீர்கள் என்று கண்டித்தார்

அதற்கு துறவி சிரித்தபடியே மன்னா. விழித்திருக்கும் நேரத்தில் உங்களோடு 

சேர்ந்து கோபமும் விரோதமும், அதிகாரம் செய்யும் ஆசையும் விழித்து
கொண்டுதானிருக்கிறது. அதனால் பாதிக்கபடுகின்றவர்கள் மக்களே. ஆகவே 
நீங்கள் உறங்கும் போது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொன்னார்.
Download As PDF

1 comment:

நிகழ்காலத்தில்... said...

உண்மைதான், விழித்திருக்கும் நேரத்தில் விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியம் என உணர்த்திய துறவிக்கு நன்றிகள் பல..

வாழ்த்துகள் நண்பரே