Sunday, April 3, 2011

வாழ்வில் சலிப்பு.



உலகில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் சலிப்படைவதில்லை.
பறவைகளும்,விலங்குகளும்  மகிழ்ச்சியையே வாழ்க்கையாய் கொண்டிருக்கின்றன.

மனிதர்களில் சிந்திக்க தெரிந்த அறிவாளிகளும்,திறமைசாலிகளும் மட்டுமே 
அலுத்துப போகின்றனர்.

பாமரர்களுக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.அவர்கள் தங்களுடைய குடும்பத்தின் முன்னேற்றத்திலும்,செல்வ பெருக்கிலும் சிந்தை வைத்தவர்கள்.சின்ன சின்ன 
மகிழ்ச்சியில் தன்னை மறப்பவர்கள்.அவர்களுக்கு சலிப்பு வராது.விலங்குகளைப் 
போலவே தேடுவதும்,கூடுவதும்தான் அவர்களுக்கு வாழ்க்கையாகிப் போகிறது.

நீங்கள் அலுத்துப் போனீர்கள் என்றால் வாழ்கையின் அர்த்தமற்ற நிலையை,
பயனற்ற நிலையைப் புரிந்துகொண்டீர்கள் என்பதாகும்.அப்போது வாழ்க்கையை 
எப்படி எதிர்கொள்வீர்கள்?

இரண்டு விதமாக.ஒன்று அதிலிருந்து விலகி ஓடுவது அல்லது தப்பித்துக்கொள்வது.

மற்றொன்று-நேருக்குநேர் எதிர்கொள்வது.

எதிர்கொள்ள துணிபவன் உண்மையை காண்கிறான்.
Download As PDF

1 comment:

எண்ணங்கள் 13189034291840215795 said...

எதிர்கொள்ள துணிபவன் உண்மையை காண்கிறான்.//

சலிப்பும் சோர்வும் தவிர்ப்பவனே சமூகத்துக்காக பாடுபடுவான்.