உயிரின் இரு பரிமாணங்கள் ஆண்மையும்,பெண்மையும்.
ஆண்மையிருந்து பெண்மையும்,பெண்மையிலிருந்து ஆண்மையும் உண்டாகிறது.
இதற்குமேல் இயற்கையின் கருணையை,தர்மத்தை என்னவென்று சொல்வது.
உடலளவில் வேறுபட்டாலும் பெண்மைக்கு என்று ஒரு சில பெருமைகள் இருக்கவே செய்கிறது.
பொறுமையும்,தன்னை இழப்பதில் உள்ள தியாகத்தின் உருவகமே பெண்மை.மண்ணையும்,
ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவு ஒன்றேயாம்,
ஆனாலும் பெண்ணுக்கு பேதை குணம் உண்டு என்றால் ஔவை.
மண்ணில் இட்ட விதை மண்ணின் சாரத்தை எடுத்தே வளர்கிறது.அதனால் மண்ணின்
பேதமை என்பது தன்னை இழப்போம் என்று தெரிந்தே இழப்பது(தியாகம்).இதன் பொருட்டே இறைவனும் தாயுமானவன் என்றழைக்கப்படுகிறான்.
ஆகவே பெண்மையை போற்றுவதென்பது உண்மையில் என்னையே போற்றுவதாகும்.
தியாகமே! உன்னை வணங்குகிறேன்,வாழ்த்துகிறேன்.
வாழ்க பெண்மை!
உடலளவில் வேறுபட்டாலும் பெண்மைக்கு என்று ஒரு சில பெருமைகள் இருக்கவே செய்கிறது.
பொறுமையும்,தன்னை இழப்பதில் உள்ள தியாகத்தின் உருவகமே பெண்மை.மண்ணையும்,
ஆறுகளையும் மற்றும் சிறப்பானவற்றை எல்லாம் பெண்பால் பெயரிட்டு அழைப்பது
ஏனெனில் அவற்றின் தியாகத்தின்,பொறுமையின் பொருட்டே!
ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவு ஒன்றேயாம்,
ஆனாலும் பெண்ணுக்கு பேதை குணம் உண்டு என்றால் ஔவை.
மண்ணில் இட்ட விதை மண்ணின் சாரத்தை எடுத்தே வளர்கிறது.அதனால் மண்ணின்
வளம் குன்றும்.நீரின் பெருமை எழுத்தில் அடங்கா.தன் இயல்பான தூய்மையை,தன்னை இழப்பதில் முன்னிலை.தாயை பழித்தாலும் நீரை பழிக்காதே என்பது பழமொழி.தாய் தன் அங்கத்தில் உடல் அளித்து உதிரத்தை உணவாக உட்டுகிறாள்.சிசுவை தன்னில் ஒரு பாகமாகவே கருதி அன்பை அளிக்கின்றாள்.
பேதமை என்பது தன்னை இழப்போம் என்று தெரிந்தே இழப்பது(தியாகம்).இதன் பொருட்டே இறைவனும் தாயுமானவன் என்றழைக்கப்படுகிறான்.
ஆகவே பெண்மையை போற்றுவதென்பது உண்மையில் என்னையே போற்றுவதாகும்.
தியாகமே! உன்னை வணங்குகிறேன்,வாழ்த்துகிறேன்.
வாழ்க பெண்மை!
No comments:
Post a Comment