எழுத்துக்கள் அனைத்தும் புள்ளியை ( அகரம் ) ஆரம்பமாகவும் ஆதாரமாகவும் கொண்டது. அனுபவத்திற்கு இடமான இந்த புவனமும் அனுபவிப்பதற்கு ஆதாரமான இந்த உடலும் ஆதியாய் நின்ற வாலறிவையே முதலாக கொண்டது ஆகும்.
அகரமும் உதலமும் முதலான பொருள் ஆதி!
உலகு என்ற சொல் இந்த பிரமாண்டத்தையும் உடலையும் குறிக்கும்.
இதையே தாயுமானவரும்
"தன் அருள் வெளிக்குள்ளே
அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும்படி இச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த்
தழைத்தது எது? "
என அகிலமாகவும் உயிருக்கு உயிராய் நின்று தழைத்தது "ஆதியாய் நின்ற அறிவு" என சுட்டுகிறார்.
No comments:
Post a Comment