Thursday, June 21, 2012

சாதாரண மனிதனாகவே இரு.





சாதாரண மனிதனாகவே இரு. 
அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.


இரண்டு ஜென் குருக்களின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.”எங்கள் குரு மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் குரு என்ன செய்வார்?”, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.

ஜிங்ஜு `எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயைபயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்’, என்றான்.அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் குரு உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன். ” 

அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்” என்று என் குரு சொன்னார் என்றான் ஜிங்ஜு. உண்மையும் அதுவே!
Download As PDF

No comments: