Friday, October 4, 2013

உனக்கும் அது சாத்தியமே!



நீயும் என்னை போன்றவன்.
நான் புத்தனாக முடியும் எனில் உனக்கும் அது சாத்தியமே! 
நீ கவலைப்பட தேவை இல்லை. ஞானத்தை பெறுவதென்பது ஒரு சிலருக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல! அது உன்னுடைய பிறப்புரிமை.
Download As PDF

இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை!



இயல்பானது எல்லாம் இயற்கை! 
இயல்பற்றது செயற்கை! 
இயல்பானதெல்லாம் இறைவனிடமிருந்து வந்தது.
செயற்கையானவை மனிதனிடம் இருந்து வருவது.
நீங்கள் இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை! 
இயல்பற்றதை கற்றுக் கொள்ளாதிருந்தால் போதும்!
Download As PDF

நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்!



நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்!

உங்கள் வாழ்க்கை என்ற புத்தகம்தான்! 
அதை கற்று தெளிவதே உண்மையான அனுபவம் மற்றும் அறிவு.நீங்கள் வேதங்களையும் உபநிடதங்களையும் விட்டு தள்ளுங்கள். அவற்றை பற்றிய கவலை வேண்டாம்! வாழ்க்கையில் புகுந்து பாருங்கள் அதுவே உண்மையான வேதம்!
Download As PDF

"நான்" இல்லாது போகட்டும்!



அனுபவிப்பனாகிய "நான்" இல்லாது போகட்டும்!

புத்தர் உடைமைகளை விடுங்கள் என்று சொல்லவில்லை. உடைமையாளரை விடுங்கள் போதும் என்கிறார். காரணம் ஒன்றை விட்டால் இன்னொன்றை பெற உடைமையாளனால் முடியும்! எல்லா துன்பங்களுக்கும் இந்த அகந்தையே (நான்) காரணம் எனவே அகந்தையை விட்டு வாழ! என்கிறார். எனவே பொருள்கள் இருக்கட்டும். பொருள்களை அனுபவிப்பவன் இல்லை என்றாகட்டும்!

ஆராயும் இடத்து நான் இல்லாது போகும் என்பதை உன் அனுபவத்தில் ஆராய்ந்து உணர்ந்து கொள்! இது என் அனுபவம்! 


~புத்தர்.
Download As PDF

குறிக்கோள் என்றும் எதுவும் கிடையாது!


குறிக்கோள் என்றும் எதுவும் கிடையாது! 

குறிக்கோள் என்பது கற்பனையானது. கற்பித்துக் கொள்வது. நாம்தான் அதனை உருவாக்குகிறோம். ஆனால் அதுவோ துயரத்தையும் அச்சத்தையும் மன இறுக்கத்தையும் நமக்கு ஏற்படுத்தி விடுகிறது. குறிக்கோளை நோக்கி செல்பவர் பண்பாளர் என்றும், குறிக்கோள் அற்றவர் அர்த்தமற்றவர் என்றும் தீர்மானிக்கின்றோம்!

குறிக்கோளை விடுங்கள். புண்ணியாத்மாக்கள் .பாவாத்மாக்கள் என்கிற பேதம் ஒழியும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற வேற்றுமை மறையும். மதிப்பீடுகளை தூக்கி எறியுங்கள். சொர்க்கம்,நரகம் என்று ஏதும் இருக்காது.

போகிற இடமென்று ஏதும் இல்லை. போகிறவர் யாரும் இல்லை! குறிக்கோள் என்பது எதிர்காலம் பற்றியது. எதிர்காலத்தின் மீது நமக்கு எப்போதும் ஆர்வம். அந்த ஆர்வத்தில் நிகழ்காலத்தை இழந்து விடுகிறோம்!      

~ கௌதம புத்தர் 
Download As PDF

Wednesday, November 21, 2012

வரமா! சாபமா!

மனிதனுக்கு அளிக்கப்பட்ட  மாபெரும் கொடையே அவனது மனம்! அதை வரமாக்கி கொள்வதோ அல்லது சாபமாக்கி கொள்வதோ அவரவரது செய்கையை பொறுத்தது! செயலுக்கு ஆதாரமான எண்ணமே அனைத்திற்கும் காரணமாக அமைகிறது. நன்றும் தீதும் பிறன் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. நன்மை அளிக்கும் எண்ணமும்,சொல்லும் செயலையுமே பெரியோர்கள் அறம் என்றழைத்தனர். செய்வன செய்தலும் செய்யாதன செய்யாதிருத்தலுமே அறம் என தொல்காப்பியமும் சான்று பகர்கின்றது. புலனின்பத்தால் மனதில் தோன்றும் காமம் வெகுளி மயக்கமுமே அதை மாசுபடுத்துகிறது. மாசற்ற மனமே அறத்திற்கேல்லாம் தலையாயது என்பதை வள்ளுவமும் வழிமொழிகிறது! அத்தகைய அறத்தை தானே உவந்து மேற்கொள்வதே சிறப்பு என்பதை அவ்வையும் ஒற்றை வரியில் அறம் செய்ய விரும்பு என்கிறார். ஆக மனதை வரமாகிக்கொள்ள வழி இதுவே!  
Download As PDF