Sunday, September 30, 2012

இதுதான் அன்பின் வெளிப்பாடு!



அன்பை பற்றி போதித்த குரு தன் சிடர்களுக்கு அது எவ்வாறு விளங்கியுள்ளது என்பதை அறிய அந்த நான்கு  பேரையும் அன்பின் வெளிப்பாடாக ஏதேனும் கொண்டு வாருங்கள் என்று அனுப்பினார். ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார். இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன்வந்தார். மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார். நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார். நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லையே ஏன்? என்று கேட்டார் அந்த குரு 



அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன்பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர்செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியதுஅதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமானவாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்றுவிட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார்.
குரு  மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு! 

அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே உண்மையில் அன்பின் வெளிப்பாடு!
Download As PDF

No comments: