எண்ணம்,சொல்,செயல் இம்மூன்றும் மனிதனுக்கு கிடைத்த மாபெரும் கொடை.
சொல்லுக்கும்,செயலுக்கும் எண்ணமே முதல் காரணம்.
உங்களின் சொல்லையும்,செயலையும் நிர்ணயப்பது
உங்களின் எண்ணமே!எண்ணங்களாலேயே மனிதன் உயர்வடைகிறான்.
சுயநலமற்ற எண்ணமும்,சொல்லும்,செயலும் என்றும் நல்லவையே!
நல்லதையே எண்ணுங்கள்.எண்ணுவதையே சொல்லுங்கள்.
சொல்வதையே செய்யுங்கள்!ஒரு மனிதனுக்கு இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில்
அமையுமானால் வாழ்க்கை இயல்பாக அமையும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.
எண்ணத்தில் தூய்மையும்,தெளிவும் இல்லாவிட்டால்
அதை தொடர்ந்த சொல்லும்,செயலும் துன்பத்தையே தரும்.
எண்ணம் ஒன்றும்,சொல் ஒன்றும்,செயல் ஒன்றும்
இருப்பவர்கள் வாழ்க்கையில் கடைசிவரை நடித்துக்
கொண்டுத்தான் இருக்கவேண்டும்.அவருக்கே அவர் புதிராகி போவார்.
ஆக உங்களின் எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!
No comments:
Post a Comment