இன்றைய மனிதன் தன் வாழ்நாளில் தனது அடிப்படை தேவையான உணவு,உறைவிடம்
இவற்றிற்கே தன் நேரத்தையும்,சக்தியையும் முழுமையாக செலவழித்து விடுகிறான்.
போதாகுறைக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தன்னை
முழுவதுமாக இழந்துவிடுகிறான்.தன் சுயதேவைக்கே (சுயநலத்திற்கே)
நேரம் முழுவதும் சென்றுவிடுவதால் பின் அவனின் சுய சிந்தனைக்கும்,
கற்பனைக்கும் நேரமேது....
ஒரு நல்ல அரசு மனிதனின் இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்தால்
அங்கே மனித சக்திகள் வளர்க்கப்படும். மனிதனின் பொதுநல போக்கு வளரும்.
நல்ல தரமான மனிதர்கள் தோன்றுவார்கள்.சிந்தனை
அவர்களது ரசனையும் கூடும்.
நாகரீகம் வளரும்.பொற்காலம் என்பதை கண்களால் காணலாம்.
பல பொற்காலங்களை கண்ட சமுதாயம் இது.உலகிற்கு உயரிய நாகரீகங்களை வழங்கிய நாடு இது.
இன்று வெறும் அடையாளங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு சவமாய் காட்சி அளிக்கிறது
மன்னன் எப்படியோ மக்களும் அவ்வழியே என்பார்கள்.ஒரு நல்ல தொலைநோக்கு இல்லாத தலைவர்களால் சுதந்திரம் பெற்றும் நாம் இன்னும் அடிமைகளாக வாழ்கிறோம்.மனித சக்திகள்
இங்கே வீணடிக்கப்படுகிறது.
நெஞ்சு பொறுக்குதில்லையே!!
இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால்.....
1 comment:
தனிமனிதனால் நிறைவேற்றக்கூடிய பொருட்களை இலவசமாக வழங்குவதுதான் அரசுக்கு தெரியும்.
தனிமனிதனால் நிறைவேற்ற இயலாத சாலை மின்சாரம் போக்குவரத்து ஆகிய அடிப்படை வசதிகளை
செம்மைபடுத்த தெரியா மூடத்தனம் மிகுந்த அரசு
Post a Comment