படுபவர்கள் ஞானமடைவது என்பது மிகக் கடினமாகும்.
அப்படி ஞானம் பெற்றால் அது பேரதிசயமாகும்.
சமானியமானவர்கள் தன்மாற்றம் அடைவதற்கு சுலபமாக தயாராகி விடுகிறார்கள்.ஏனெனில் அவர்களிடம் தங்களை பிணைத்திருக்கும் தளையையும்,அறியாமையையும் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை.
விஷய அறிவாளியோ தன்னுடைய விஷய அறிவை இழப்பதற்குப் பயப்படுகிறான்.ஏனெனில் அது அவனது விலை மதிப்பற்ற சொத்து.
அவன் அதை பாதுகாப்பதற்கு தர்க்க ரீதியான காரணங்களையும்,
சாக்கு போக்குகளையும் கண்டுபிடிக்கிறான்.அனால் உண்மையில்
அவனது விஷய அறிவை பாதுகாப்பதன் மூலம்,அவனது
அறியாமையையே பாதுகாக்கிறான்.
அறிவுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்வதே அவனது அறியாமை.
அவனது சுயமுகத்தை மறைக்கும் முகமூடி.
நீங்கள் அவனது சுய முகத்தை பார்க்கமுடியாது.
அவனாலும் அதைப் பார்க்க முடியாது.
முகமூடியை அணிந்துக் கொண்டு கண்ணாடியின் முன்னே
நின்றுக்கொண்டு "இதுதான் என்னுடைய சுயமுகம்" என்று நினைத்துக்கொள்கிறான்.
No comments:
Post a Comment