Saturday, June 18, 2011

பெரிய துறவி


கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாத பணக்காரர் 

ஒருவருக்கு இராமகிருஷ்ண பரமஹம்சருடன் 
உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

பேசிக்கொண்டிருக்கும்போது "சுவாமி தாங்கள் 

கடவுளுக்காக தாங்கள் வாழ்க்கையை துறந்து விட்டீராமே"என்றார்.அதற்கு சிரித்தமுகத்துடன்,
"நான் துறவிதான்.ஆனால் என்னைவிட பெரிய துறவி 
நீதான்" என்றார். இராமகிருஷ்ணர்.

அவரின் பதிலை கேட்ட செல்வந்தருக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது போலானது.
திகைப்பு மேலிட,"என்ன சுவாமி சொல்கிறீர்கள்?உங்களைவிட நான் பெரிய துறவியா?" என்று கேட்டார்.

நானோ கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன்.
நீரோ சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்து விட்டீர்.
எனவே என்னைவிட நீர்தான் பெரிய துறவி"என்று இராமகிருஷ்ணர் கூறினார்.

செல்வந்தன் தலை வெட்கத்தால் கவிழ்ந்தது.
Download As PDF

No comments: