நமது உடலின் அமைப்பை நன்கு கூர்ந்து கவனித்தால் அது இந்த உலகை
மிக நேர்த்தியாக தொடர்பு கொள்ள வடிவமைக்கபட்டுள்ளதை காணலாம்.
இந்த உடலை கொண்டே இவ்வுலகத் தொடர்பு.
"உயிருக்கு உறுகண் செய்யாமை" என்பது பிற
உயிருக்கு செய்வதுமட்டுமன்றி தன் உயிர்க்கும் உறுகண்
செய்யாதிருத்தல் வேண்டும்.
நாக்கு செத்துவிட்டது என்றால் நாக்கின் உயிராகிய சுவை குன்றிவிட்டது என்று பொருள்.அதுபோல் கண்.காது,மூக்கு,சரீரம்,நாக்கு மற்றும் மனதிற்கு அதனதன் உயிராகிய பார்வை,கேள்வி,மணம்,தொடுஉணர்வு மற்றும்
எண்ணம் ஆகியவையே ஆருயிர் என்றழைக்கப்படுகிறது.
கண்ணின் பார்வை காட்சியாலேயே மங்கும்.காதின் உயிர் சப்தத்தில்
மங்கும்.அதனதன் விஷயத்தாலேயே அதற்கு தோய்வு உண்டாகும்.
ஆகவே அதனதன் விசயத்தில் கவனம் வேண்டும்.இந்த விஷய
சுகங்களே புலனின்பங்கள் என்றழைக்கப்படுகிறது.
இந்த விஷய சுகங்கள் உலக அனுபவங்களை தருமே தவிரே அதன் தோற்றிடத்தை அறிய உதவாது.அதாவது கண்ணின் பார்வை
எங்கிருந்து வருகிறது என்பதை கண்கள் ஒருபோதும் காணாது.
அவை காட்சிகளிலேயே லயத்திருக்கும்.இது போன்றே அனைத்து
புலன்களும் வெளி நோக்குடையவையே!
இவை அனைத்தும் "எந்த ஆதாரத்தை" பற்றி இயங்குகிறது
என்பதை அறிய உதவுவது இல்லை.
இதை அனுபவத்தில் உணர்ந்த ஞானிகள் இப்புலன்கள் பற்றி
பின்வருமாறு பாடியுள்ளனர்.
"புலன்கள் ஐந்தும் வஞ்சனையை செய்ய!
விலங்கு மனத்தால் விமலா உனக்கு"என்று மாணிக்கவாசகரும்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே! என திருமூலரும் உரைக்கின்றனர்.
இப்புலன்களால் ஏற்படும் மயக்கை நீக்கி அதன் ஆதாரத்தை
அறிவதே அறிவுடையோரின் கடமையாகும்.
மேலும் இந்த உடல் ஞானத்தை பெற ஒரு சிறந்த சாதனம்(ஏணி).
இதை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதனையே திருமூலர்
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" எனவும்,உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்"என ஒளவையும் வலியுறுத்துகிறார்.
உடம்பினுள் உத்தமன் எவ்வாறு கோவில் கொண்டுளான் என்பதை
அறிவதே இவ்வுடலை பெற்றதன் நோக்கமாகும்.
எனவே உடம்பைப் பெற்ற மக்களே!
உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.
1 comment:
மிக அருமையான பதிவு..........
Post a Comment