தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
திரிகடுகம் 12.
தளராமுயற்சி உள்ளவன் கடன்படாது வாழ்வான்.
நல்ல வேளாளன் என்பவன் பிறரின் பசியை போக்காது உண்ணாதவன்.
கேளாளன் என்பவன் செய்நன்றி மறவாதவன்.
இவ்மூவரின் குணமாகிய தளர முயற்சியும்,
தன்பசி போன்று பிறர்பசி ஆற்றுவித்தல்,செய்நன்றி அறிதல்
ஆகிய குணங்களை கொண்டு வாழும் வாழ்வே இனிது.
1 comment:
அருமையான விளக்கத்துடன் தமிழ் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment