எத்தனை எத்தனை முகங்கள்!
குழந்தைகளுக்கு தகப்பனாக,மனைவிக்கு நம்பிக்கைக்குரிய
மற்றும் பொறுப்புள்ள கணவனாக,பெற்றோருக்கு அன்பு மாறாத மகனாக,உடன்பிறப்புகளுக்கு பாசமுள்ள சகோதரனாக,
நண்பர்களுக்கு ஆதரவான நண்பனாக,உறவுகளை மதிக்கத்தக்க உறவினனாக,பொறமை, சுயநலத்தால் சிலருக்கு பகையாக,
முதலாளிக்கு நல்ல உழைப்பாளியாக,சமுதாயத்திற்கு கண்ணியமுள்ள மனிதனாக மற்றும் என் மனதிற்கு நான் எப்போதும் நல்லவனாக இன்னும் எத்தனை எத்தனை பொய் முகங்கள்!
இத்தனை கதாபாத்திரங்களிலும் இயல்பாக இருப்பதை விட்டுவிட்டு
என்னை நான் திறமைமிக்கவனாக நிலைநிறுத்திக் கொள்ள எத்தனை நடிப்புகளை நடிக்க வேண்டியுள்ளது.
இதில் நான் என்னை தொலைத்துவிட்டேன்.
ஓ! இறைவனே,
என் இயல்பான முகம் எங்கே தொலைந்து போனது?
No comments:
Post a Comment